இந்தியா

தொடர்ந்து அதிகரிக்கும் பெட்ரோல், டீசல் விலை, பணவீக்கம்.. ஆர்பிஐ ரெப்போ வட்டியை உயர்த்துமா? குறைக்குமா?

Published

on

ஆர்பிஐ கவர்னர் சக்தி காந்த தாஸ் ஏப்ரல் 8-ம் தேதி, நடப்பு நிதியாண்டின் முதல் நாணய கொள்கை கூட்டத்தை நடத்த உள்ளார். கச்சா எண்ணெய், அத்தியாவசிய பொருட்கள் விலை உயர்ந்து வருவதால் பணவீக்கமும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. எனவே நடக்க இருக்கும் நாணய கொள்கை கூட்டம் முக்கியமான ஒன்றாகப் பார்க்கப்படுகிறது.

2022-2023 நிதியாண்டில் வளர்ச்சி எப்படி இருக்கும், பணவீக்கம் கட்டுப்பாட்டுக்குள் வருமா என்பது குறித்து எல்லாம் இந்த நாணய கொள்கை கூட்டத்தில் விவாதிக்கப்படும்.

சென்ற ஆண்டு மார்ச் மாதம் கொரோனா இரண்டாம் அலை உச்சத்திலிருந்தது. அதனால் அதற்கு ஏற்றவாறு நாணய கொள்கை முடிவுகள் எடுக்கப்பட்டது. இந்த ஆண்டு கொரோனா குறைந்து இருந்தாலும் ரஷ்யா-உக்ரைன் போரால் தொடர்ந்து அதிகரித்து வரும் கச்சா எண்ணெய் விலை, அத்தியாவசிய பொருட்கள் விலை போன்றவை முக்கிய பிரச்சனைகளாக உள்ளன.

பொதுவாக இதுபோன்று பணவீக்கம் அதிகரிக்கும் சூழலில் ஆர்பிஐ பொதுவாக வட்டி விகிதங்களைக் குறைக்கும்.

கடைசியாக 2020-ம் ஆண்டு மே 22-ம் தேதி ஆர்பிஐ ரெப்போ வட்டி விகிதத்தைக் குறைத்தது. கொரோனா காலகட்டத்தில் மட்டும் 1.15 சதவீதம் வரை ஆர்பிஐ வட்டி விகிதத்தைக் குறைத்தது. ஆர்பிஐயிடம் இருந்து வங்கிகள் பெரும் கடனுக்கான ரெப்போ வட்டி விகிதம் 4 சதவீதமாக உள்ளது. வங்கிகளிடமிருந்து ஆர்பிஐ பெரும் கடனுக்கான வட்டி விகிதம் 3.35 சதவீதமாக உள்ளது.

சில்லறை பணவீக்கம் அதிகரித்து வருவதால் ஆர்பிஐ ரெப்போ வட்டி விகிதத்தைக் குறைக்க அதிக வாய்ப்புகள் உள்ளது. அதே நேரம் வட்டி விகிதம் மாற்றம் இல்லாமலும் போகலாம். ரெப்போ வட்டி விகிதம் குறைந்தால் வங்கிக் கடன் திட்டங்கள் மீதான வட்டி விகிதம் குறையும். அதனால் வங்கி சேமிப்பு திட்டங்களின் வட்டி விகிதம் குறைந்து சேமிப்பார்களைப் பாதிக்கும்.

இதுவே ரெப்போ வட்டி விகிதம் உயர்ந்தால் வீடு உள்ளிட்ட கடன் திட்டங்கள் மீதான வட்டி விகிதம் உயரும். பிக்சட் டெபாசிட் உள்ளிட்ட சேமிப்பு திட்டங்கள் மீதான வட்டி விகிதமும் உயர்ந்து கூடுதல் லாபம் கிடைக்கும்.

seithichurul

Trending

Exit mobile version