வணிகம்

ரெப்போ வட்டி விகிதத்தில் மாற்றமில்லை.. சாமானிய மக்கள் கவனிக்க வேண்டியவை!

Published

on

ரெப்போ வட்டி விகிதத்தில் மாற்றமில்லை என இந்திய ரிசர்வ் வங்கி நாணய கொள்கை கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.

எனவே ரெப்போ வட்டி விகிதம் 4 சதவீதமாகவும், ரிவர்ஸ் ரெப்போ வட்டி விகிதம் 3.5 சதவீதமாகத் தொடருகிறது.

ரெப்போ வட்டி விகிதம் என்றால் வங்கிகள் ஆர்பிஐயிடம் இருந்து பெறும் கடனுக்குச் செலுத்தும் வட்டி தொகை. ரிவர்ஸ் ரெப்போ வட்டி விகிதம் என்பது ஆர்பிஐ வங்கிகளிடம் இருந்து பெரும் கடனுக்கான வட்டி விகிதம்.

ரெப்போ வட்டி விகிதம் உயர்ந்தால் கடன் திட்டங்கள் மீதான வட்டி விகிதங்கள் உயரும். ரெப்போ வட்டி விகிதம் குறைந்தால் கடன் திட்டங்கள் மீதான வட்டி குறையும். இப்போது உள்ள 4 சதவீத ரெப்போ வட்டி விகிதம் இதுவரை இல்லாத குறைவாகும்.

எனவே வீட்டுக் கடன், வாகனக் கடன், தனிநபர் கடன் விகிதங்கள் இதுவரை இல்லாத அளவுக்குக் குறைவான வட்டி விகிதத்தில் கிடைக்கும்.

கொரோனா காலத்தில் 4 சதவீதமாகக் குறைக்கப்பட்ட ரெப்போ வட்டி விகிதம் குறைக்கப்பட்டது. தொடர்ந்து 8 முறையாக ரெப்போ வட்டி விகிதத்தில் மாற்றமில்லை. 2 மாதத்திற்கு ஒரு முறை ஆர்பிஐ ஆளுநர் தலைமையில் நாணய கொள்கை கூட்டம் கூடி ரெப்போ வட்டி விகிதம் குறைப்பது குறித்து முடிவு செய்யும்.

ரெப்போ வட்டி விகிதம் குறைத்தால், கடன் மீதான வட்டி குறைந்து மக்களிடம் பணப்புழக்கம் அதிகரிக்கும் என்பது எதிர்பார்ப்பு.

seithichurul

Trending

Exit mobile version