இந்தியா

கிழிந்த, அழுக்கான 200 மற்றும் 2000 ரூபாய் நோட்டுகளை மாற்ற ஆர்பிஐ-க்கு மத்திய அரசு அனுமதி!

Published

on

மத்திய அரசு 2016 நவம்பர் 8ம் தேதி பழைய 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகளின் மதிப்பினை நீக்கியதை அடுத்து 2000 மற்றும் 200 ரூபாய் நோட்டுகளை அறிமுகம் செய்து இருந்தது.

ஆனால் இந்த ரூபாய் நோட்டுகளை 5, 10, 20, 50, 100, 500 மற்றும் மதிப்பு நீக்கப்பட்ட 1000 ரூபாய் நோட்டுகளைப் போன்று இந்தப் புதிய நோட்டுகளை மாற்ற முடியாத சூழல் இருந்து வந்த நிலையில் சென்ற வாரம் ஆர்பிஐ, நிதி அமைச்சகத்திற்கு இடையிலான கூட்டத்தில் 200 மற்றும் 2000 ரூபாய் நோட்டுகள் கிழிந்து அல்லது சேதம் அடைந்து இருக்கும் போது மாற்ற அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

தற்போது இதற்கான ஆர்பிஐ போர்டு இயக்குநர்களின் அனுமதிக்காக அனுப்பப்பட்டுள்ளதாகவும் சில நாட்களில் இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளிவர வாய்ப்புள்ளதாகவும் செய்தி சுருள் தளத்திற்குத் தகவல் கிடைத்துள்ளது.

seithichurul

Trending

Exit mobile version