இந்தியா

இனி ரிஸ்க்கான முதலீடு தேவையில்லை.. பிக்சட் டெபாசிட்டுக்கு 9% வட்டி தரும் வங்கிகள்!

Published

on

பிக்சட் டெபாசிட் முதலீடு என்றாலே வட்டி வருவாய் அதிகமாக இருக்காது என்றும் அதிகபட்சம் 5 அல்லது 5.5 சதவீதம் மட்டுமே இருக்கும் என்றும் ஒரு சில மாதங்களுக்கு முந்தைய நிலையாக இருந்தது.

ஆனால் சமீபத்தில் இந்திய ரிசர்வ் வங்கி ரெப்போ வட்டி விகிதத்தை உயர்த்தியதால் தனியார் மற்றும் தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள் போட்டி போட்டுக்கொண்டு பிக்சட் டெபாசிட்டுக்கான வட்டி விகிதத்தை உயர்த்தி வருகின்றன. சில வங்கிகள் 7.5 சதவீதம் வரை வட்டி கொடுப்பதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் ஒரு சில வங்கிகள் 9 சதவீதம் வரை வட்டி வழங்க இந்திய ரிசர்வ் வங்கி அனுமதி அளித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அது குறித்த முழு விபரங்களை தற்போது பார்ப்போம்.

உஜ்ஜீவன் ஸ்மால் ஃபைனான்ஸ் வங்கி (SFB) தனது புதிய வட்டி விகிதங்களை அறிவித்துள்ள நிலையில் பிக்சட் டெபாசிட்டிற்க்கு 8.00 சதவீதமும், மூத்த குடிமக்களுக்கு 8.75 சதவீதமும் தருகிறது. 560 நாட்கள் அதிகபட்ச டெபாசிட் திட்டத்திற்கு இந்த வட்டி விகிதங்களை வழங்கியுள்ளதாகவும், இந்த சதவிகிதம் தற்போது அமலில் உள்ளதாகவும் அறிவித்துள்ளது.

மேலும் Utkarsh SFB வங்கி அதிகபட்சமாக 700 நாட்கள் டெபாசிட் காலத்திற்கு பிக்சட் டெபாசிட்டுக்கான வட்டி விகிதம் 8.00 சதவீதமும், மூத்த குடிமக்களுக்கு 8.75 சதவீதமும் வழங்கி வருகிறது.

Equitas SFB தனது வட்டி விகிதங்களையும் புதுப்பித்துள்ள நிலையில் இந்த வங்கியில் பிக்சட் டெபாசிட்டுக்கான வட்டி விகிதம் 8.00 சதவீதமும், மூத்த குடிமக்களுக்கு 8.50 சதவீதமும் 888 நாட்கள் திட்டத்திற்கு வழங்கி வருகிறது.

Fincare SFB வங்கி பிக்சட் டெபாசிட்டுக்கான வட்டி விகிதம் 8.00 சதவிகிதம் மற்றும் மூத்த குடிமக்களுக்கு 8.50 சதவிகிதம் என்று 1000 நாட்கள் திட்டத்திற்கு வழங்கி வருகிறது.

பங்கு வர்த்தகம், மியூச்சுவல் ஃபண்ட் போன்ற ரிஸ்கான முதலீடுகளில் முதலீடு செய்தால் அதிகபட்சம் 12 முதல் 15 சதவீதம் வட்டி வருவாய் கிடைக்கும். ஆனால் அதே நேரத்தில் அதில் நஷ்டம் அடையும் வாய்ப்பு உண்டு. ஆனால் இது போன்ற சிறு வங்கிகளில் 9 சதவீத வட்டி விகிதத்திற்கு பிக்சட் டெபாசிட் செய்வது சாலச் சிறந்தது என பொருளாதார அறிஞர்கள் தெரிவித்து வருகின்றனர்.

seithichurul

Trending

Exit mobile version