பர்சனல் ஃபினான்ஸ்

இன்று முதல் ஆன்லைன் வங்கி சேவையில் அதிரடி மாற்றம்.. 24/7 இதை செய்யலாம்!

Published

on

இன்று நள்ளிரவு 12:30 மணி முதல் ஆன்லைன் வங்கி சேவையில், 24/7 மணி நேரமும் ஆர்.டி.ஜி.எஸ் (நிகழ் நேரப் பெருந்திரள் தீர்வு) பணப் பரிவர்த்தனை செய்யலாம் என்று ஆர்பிஐ கவர்னர் சக்திகாந்த தாஸ் தெரிவித்துள்ளார்.

ஆர்.டி.ஜி.எஸ் பணப் பரிவர்த்தனை சேவை குறித்துத் தெரிந்துகொள்ள வேண்டியவை:

1) இதுவரை ஆர்.டி.ஜி.எஸ் பணப் பரிவர்த்தனை காலை முதல் மாலை வரை மட்டுமே செய்ய முடியும். இனி 24 மணி நேரமும் ஆர்.டி.ஜி.எஸ் சேவை மூலம் பணம் பரிவர்த்தனை செய்ய முடியும்.

2) ஆன்லைன் வங்கி சேவையில் 2 லட்சம் ரூபாய்க்கும் அதிகமாகப் பரிவர்த்தனை செய்யும் போது ஆர்.டி.ஜி.எஸ் சேவை பயன்படுத்தப்படும்.

3) இன்று வரை வங்கி வேலை நாட்களில், காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை மட்டுமே ஆர்.டி.ஜி.எஸ் மூலம் பணம் பரிமாற்றம் செய்ய முடியும். இரண்டாம் மற்றும் நான்காம் சனிக்கிழமைகளில் ஆர்.டி.ஜி.எஸ் பணப் பரிமாற்றம் செய்ய முடியாது.

4) ஜூலை 2019 முதல் ஆர்.டி.ஜி.எஸ் பணம் பரிவர்த்தனைக்கான கட்டணத்தை ஆர்பிஐ நிறுத்தியது.

மேலும் ஜனவரி 1-ம் தேதி முதல் பிஓஎஸ் இயந்திரங்களில் காண்டெக்ட் லஸ் கார்டு மூலம் செய்யப்படும் பரிவர்த்தனை வரம்பை 2 ஆயிரத்திலிருந்து 5 ஆயிரம் ரூபாயாக ஆர்பிஐ உயர்த்த முடிவு செய்துள்ளதாகவும் தகவல்கள் கூறுகின்றன.

seithichurul

Trending

Exit mobile version