தமிழ்நாடு

கல்விக் கடன் ரத்து எப்போது? அமைச்சர் உதயநிதி ஸ்டாலினிடம் கேள்வி

Published

on

விளையாட்டு மற்றும் இளைஞர் மேம்பாட்டுத்துறை அமைச்சராக அன்மையில் பொறுப்பேற்ற உதயநிதி ஸ்டாலின் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிழக்ச்சியில் கலந்துகொள்ள மதுரைக்கு சென்றிருக்கும் நிலையில் மதுரையை சேர்ந்த முன்னாள் அமைச்சரும் அதிமுக சட்டமன்ற உறுப்பினருமான ஆர்.பி.உதயகுமார் பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளார்.

Udhayanidhi Stalin

சட்டமன்ற தேர்தலின் போது நீட் தேர்வை ரத்து செய்வதற்கான ரகசியம் தங்களுக்கு தெரியும் என்றும், தாங்கள் ஆட்சிக்கு வந்ததும் நீட் தேர்வை ரத்து செய்வோம் என்றும் பிரச்சாரம் செய்தார். மேலும் எயிம்ஸ் மருத்துவமனை என்று ஒற்றை செங்கல் ஒன்றை வைத்து பிரச்சாரம் செய்து அசத்தினார்.

இந்நிலையில் இவற்றை குறிப்பிட்ட ஆர்.பி.உதயகுமார். நீட் தேர்வை ரத்து செய்வதற்கான ரகசியத்தை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வெளியிடுவாரா? ஒற்றை செங்கலை வைத்து எய்ம்ஸ் மருத்துவமனை குறித்து பிரச்சாரம் செய்தாரே, அந்த எய்ம்ஸ் மருத்துவமனை அமைவதற்கான நடவடிக்கைகளில் அவரின் பங்களிப்பை விளக்குவாரா? கல்விக் கடன் ரத்து என்று கூறுனார்களே அதுபற்றிய மகிழ்ச்சியான தகவலை வெளியிடுவாரா? என அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பினார்.

அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மதுரை சென்றுள்ள நிலையில் அங்குள்ள அதிமுக முன்னாள் அமைச்சர் இந்த கேள்விகளை எழுப்பியுள்ளது முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. கல்விக் கடன் ரத்து செய்யப்படும் என்று திமுக தனது தேர்தல் அறிக்கையில் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

author avatar
seithichurul

Trending

Exit mobile version