தமிழ்நாடு

முதுகெலும்பற்றவர் என ஏன் கூறினார் என்று டி.ஆர்.பாலுவிடமே கேளுங்கள்: ஓ.பி.ரவீந்திரநாத்தின் அடடே பதில்!

Published

on

ஆகஸ்ட் 6-ஆம் தேதி திமுக உறுப்பினர் டி.ஆர்.பாலு காஷ்மீர் விவகாரம் குறித்து பேசிய போது அதிமுக உறுப்பினர் ரவீந்தரநாத் குமார் குறுக்கீட்டார். அப்போது டி.ஆர்.பாலு, உங்களுக்கெல்லாம் முதுகெலும்பே இல்லை, அமருங்கள் என ரவீந்திரநாத் குமாரை பார்த்து ஆவேசமாக கூறினார்.

ஜம்மு காஷ்மீரை பிரிப்பது தொடர்பான மசோதா மீதான விவாதம் மக்களவையில் நடைபெற்றபோது திமுக மக்களவை குழு தலைவர் டி.ஆர்.பாலு, பாஜகவினரை பார்த்து உங்களால் ஏன் தமிழகம், கேரளா போன்ற தென் மாநிலங்களில் வெற்றிபெற முடியவில்லை. இதற்கான காரணம் என்ன? ஏனெனில் அறிவார்ந்தவர்கள் உங்களை ஏற்றுக்கொள்ளமாட்டார்கள். அவர்கள் விழிப்புடன் உள்ளனர் என்றார்.

அப்போது அதிமுக உறுப்பினர் ரவீந்திரநாத் குமார் குறுக்கீட்டு எதிர்ப்பு தெரிவித்து பேச முயன்றார். இதனால் கோபமடைந்த டி.ஆர்.பாலு, ரவீந்திர நாத் குமாரை பார்த்து, ஏய் உங்களுக்கெல்லாம் முதுகெலும்பே இல்லை. இருக்கையில் அமருங்கள். மக்களவை என்பது முதுகெலும்புள்ள உறுப்பினர்களைக் கொண்டது. உங்களைப் போன்றவர்களுக்கானது கிடையாது என்றார்.

எனக்கு முதுகெலும்பு இருப்பதால் சபாநாயகர் என்னை பேச அனுமதித்துள்ளார். முதுகெலும்பு அற்றவர்களுக்கு அனுமதியளிக்கவில்லை என்று கூறினார். டி.ஆர்.பாலூவின் இந்த விமர்சனம் அதிமுக எம்பி ரவீந்திரநாத் குமாருக்கு பெருத்த அவமானமாக இருந்தது. இந்நிலையில் நேற்று மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த ஓ.பி.ரவீந்திரநாத் குமாரிடம் டிஆர்பாலு முதுகெலும்பற்றவர் என்று விமர்சனம் செய்தது பற்றிக் கேள்வி எழுப்பப்பட்டது.

இதற்கு பதில் அளித்த ஓ.பி.ரவீந்திரநாத் குமார், தமிழ்நாட்டு உரிமைக்காகதான் நான் நாடாளுமன்றத்தில் பேசிக் கொண்டிருக்கிறேன். ஆனால் டி.ஆர்.பாலு அப்படி பேசினார் என்றால் அதுபற்றி நீங்கள் அவரிடம் கேளுங்கள். அவர் சொல்வதையெல்லாம் நான் பெரிதாக எடுத்துக் கொள்ள மாட்டேன் என்றார்.

seithichurul

Trending

Exit mobile version