தமிழ்நாடு

தமிழ்நாட்டின் புதிய ஆளுநராக முன்னாள் உளவுத்துறை உயரதிகாரி ‘ஆர்.என்.ரவி’ நியமனம்!

Published

on

தமிழ்நாட்டின் புதிய ஆளுநராக முன்னாள் உளவுத்துறை உயரதிகாரியான ஆர்.என்.ரவி நியமிக்கப்பட்டுள்ளார்.

தமிழ்நாடு ஆளுநர் பன்வாரி லால் புரோஹித் பதவிக்காலம் முடிந்த நிலையில், அவருக்கு பஞசாப் மாநில ஆளுநர் பொறுப்பு அண்மையில் கூடுதலாக வழங்கப்பட்டது. எனவே விரைவில் தமிழ்நாடு ஆளுநர் பதவியிலிருந்து விலகி பஞ்சாப் மாநில  ஆளுநராக பன்வாரி லால் புரோஹித் முழுமையாகச் செயல்படுவார். தமிழ்நாட்டுக்கு புதிய ஆளுநர் விரைவில் அறிவிக்கப்படுவார் என்ற கூறப்பட்டு வந்தது.

இந்நிலையில் தமிழ்நாடு ஆளுநராக முன்னாள் உளவுத்துறை அதிகாரியும் நாகாலாந்து ஆளுநருமான ஆர்.என்ரபி நியமிக்கப்பட்டுள்ளார்.
பீகார் மாநிலத்தைச் சேர்ந்த ஆர்.என் ரவி 1974-ல் இயற்பியல் பிரிவில் முதுகலைப் பட்டம் பெற்றார். கல்லூரி படிப்பை முடித்த பிறகு சில காலம் பத்திரிக்கைத் துறையில் பணியாற்றி வந்த ஆர்.என்.ரவி 1976-ம் ஆண்டு இந்திய ஆவல் பணியில் சேர்ந்தார். முதலில் இவருக்குக் கேரளாவில் பணி ஒதுக்கப்பட்டது. 10 ஆண்டுகளுக்கு மேலாகக் கேரளாவில் இவர் பல்வேறு காவல் பதவிகளில் பணியாற்றினார். பின்னர் மத்திய அரசி பணிக்கு மாற்றலாகி, புலனாய்வுத்துறையில் பணியாற்றினார்.  இந்தியாவில் உளவுத்துறை இண்டலிஜென்ஸ் பியூரோவில் இவர் பணியாற்றியுள்ளார். பல்வேறு முக்கிய பணிகளிலிருந்த ஆர்.என்.ரவி 2012-ம் ஆண்டு அரசுப் பணியிலிருந்து ஓய்வுபெற்று தன்னுடைய அனுபவங்களைக் கட்டுரைகளாக வெளியிட்டு வந்தார்.
2014-ம் ஆண்டு பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசு பொறுப்பேற்ற பிறகு, ஆகஸ்ட் 29-ம் தேதி நாகாலாந்து நாஃபா சமாதான பேச்சுவார்த்தை மையத்தின் மத்தியஸ்தராக ரவி நியமிக்கப்பட்டார். 2018-ம் ஆண்டு துணை தேசியப் பாதுகாப்பு ஆலோசகராக நியமனமானார். 2019-ம் ஆண்டு மே மாதம் நாகாலாந்து ஆளுநர் பதவி இவருக்கு வழங்கப்பட்டது. இப்போது தமிழ்நாடு ஆளுநர் பதவி ஆர்.என்.ரவிக்கு வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

 

seithichurul

Trending

Exit mobile version