கிரிக்கெட்

சாதனை புரிந்த ஜடேஜா: குவியும் வாழ்த்துக்கள்!

Published

on

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையே தற்போது நாட்டிங்காம் மைதானத்தில் முதலாவது டெஸ்ட் போட்டி நடைபெற்று வரும் நிலையில் இந்த போட்டியில் இந்தியாவின் ரவீந்திர ஜடேஜா சாதனை செய்துள்ள தகவல் தற்போது வந்துள்ளது.

டெஸ்ட் கிரிக்கெட்டில் 2000 ரன்கள் மற்றும் 200 விக்கெட்டுகள் என்ற சாதனையை ஜடேஜா செய்துள்ளார். ஏற்கனவே இதே சாதனை நான்கு இந்திய வீரர்கள் செய்த நிலையில் இந்த சாதனையை செய்த ஐந்தாவது இந்திய வீரர் ஜடேஜா என்ற தகவல் தற்போது வெளிவந்துள்ளது இதனை அடுத்து ஜடேஜாவுக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது..

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது கிரிக்கெட் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி முதலில் பேட்டிங் செய்து 183 ரன்கள் எடுத்தது. இதனை அடுத்து இந்தியா தனது முதல் இன்னிங்சில் சற்றுமுன் வரை 5 விக்கெட்டுகளை இழந்து 191 ரன்கள் எடுத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

கேஎல் ராகுல் மிக அபாரமாக விளையாடி 77 ரன்களுடன் விளையாடி வருகிறார். அதேபோல் ரவீந்திர ஜடேஜா 27 ரன்கள் எடுத்து களத்தில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. நேற்றைய போட்டி மழை காரணமாக தாமதமானதை அடுத்து இன்று 3-வது நாள் ஆட்டம் நடைபெற்று வருகிறது.

மூன்று நாள் முடிவுக்கு வரும் நிலையில் இன்னும் ஒரு இன்னிங்ஸ் கூட முடிவடையவில்லை என்பதால் இந்த போட்டி டிராவை நோக்கிச் சென்று கொண்டிருப்பதாக கிரிக்கெட் வல்லுனர்கள் தெரிவித்து வருகின்றனர்.

Trending

Exit mobile version