தமிழ்நாடு

ரஜினிக்கு பதவி மீது ஆசை இல்லை; அரசியல் கைகூடாமல் போய்விட்டது – ரவீந்திர துரைசாமி

Published

on

ரஜினிக்கு பதவி மீது ஆசையில்லை என்றும் அரசியலுக்கு வரவேண்டும் என்ற அவரது எண்ணம் கை கூடாமல் போய் விட்டது என்றும் பிரபல அரசியல் விமர்சகர் ரவீந்திரன் துரைசாமி கூறியுள்ளார்.

ரஜினிகாந்த் இன்று வெளியிட்ட அறிக்கை ஒன்றில் தான் அரசியலுக்கு வரப்போவதில்லை என்று உறுதி செய்யப்பட்டதால் அரசியலுக்காக அமைக்கப்பட்ட ரஜினி மக்கள் மன்றம் கலைக்கப்படும் என்றும் எப்பொழுதும் போல் ரஜினி ரசிகர் மன்றம் மக்களின் நலப் பணிகளுக்காக இயங்கும் என்றும் தெரிவித்துள்ளார். இதனை அடுத்து ரஜினியை அரசியலுக்கு எந்த காலத்திலும் வரப்போவதில்லை என்பதை உறுதி செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் ரஜினியின் இந்த முடிவு குறித்து பிரபல அரசியல் விமர்சகரும் ரவீந்திர துரைசாமி கூறும் போது ’ரஜினிக்கு எப்பொழுதுமே பதவி ஆசை இருந்ததில்லை என்றும் அவர் அரசியலுக்கு வரவேண்டும் என்ற நிலை இருந்த போதே அவர் முதல் அமைச்சர் பதவியை ஏற்க மாட்டேன் என்று கூறியவர் என்றும் கூறினார்.

மேலும் கடந்த மூன்று மணிநேரமாக அவரைப் பற்றிய வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்து விட்டார் என்றும் அரசியல் கட்சிக்காக ரஜினி மக்கள் மன்றம் தொடங்கப்பட்ட நிலையில் தற்போது அரசியல் கட்சி தொடங்கவில்லை என்பதை அடுத்து அதை கலைத்து விட்டார் என்றும் அவர் தனது முடிவை தெளிவாகத் தெரிவித்து விட்டார் என்றும் கூறியுள்ளார்.

ரஜினி அரசியலுக்கு வந்தால் முக்கிய பதவி தருவதாக பிரதமர் மோடியே கூறி இருந்தும் தனக்கு அதில் இன்ட்ரஸ்ட் இல்லை என்றும் ரஜினிகாந்த் கூறினார் என்றும், ஆனாலும் தனித்து போட்டியிட வேண்டும் என்ற அவரது அரசியல் கை கூடாமல் போய் விட்டது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

seithichurul

Trending

Exit mobile version