தமிழ்நாடு

கொரோனா பரவும்போது டிஎன்பிஎஸ்சி தேர்வு நடத்துவதா? ரவிக்குமார் எம்.பி. கண்டனம்

Published

on

தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு வருபவர்களின் எண்ணிக்கை எதிர்பார்ப்பதை விட மிக அதிகமாகி வருவது தமிழக அரசுக்கும் சுகாதாரத்துறைக்கும் பேரதிர்ச்சியாக உள்ளது. தினமும் 7 ஆயிரத்துக்கும் அதிகமானோர் தமிழகத்திலும் இரண்டாயிரத்துக்கும் அதிகமானோர் சென்னையிலும் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு வருவதால், தமிழகம் முழுவதும் உள்ள மருத்துவமனைகளில் படுக்கைகள் பற்றாக்குறை மற்றும் ஆக்சிஜன் சிலிண்டர் பற்றாக்குறை ஏற்படும் அபாயம் உள்ளதாக கூறப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக பல்வேறு தேர்வுகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. அந்த வகையில் வரும் 17ஆம் தேதி நடைபெறும் டிஎன்பிஎஸ்சி தேர்வுகளை ரத்து செய்ய வேண்டும் என்ற கோரிக்கை எழுந்து வருகிறது.

இதுகுறித்து விடுதலை சிறுத்தைகள் கட்சியின் எம்பியும் ரவிக்குமார் என்பவர் கூறியபோது தமிழகத்தில் அதிகரித்து வருவதால் டிஎன்பிஎஸ்சி தேர்வுகளை ஒத்திவைக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார். அவர் தனது டுவிட்டரில், ‘உதவி வேளாண்மை அலுவலர், உதவி தோட்டக்கலை அலுவலர், தோட்டக்கலை உதவி இயக்குநர் உள்ளிட்ட பதவிகளுக்கு எதிர்வரும் 17,18 மற்றும் 19 ஆம் தேதிகளில் டிஎன்பிஎஸ்சி சார்பில் நடத்தப்படவுள்ள எழுத்துத் தேர்வுகளை ஒத்திவைக்கவேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

உதவி வேளாண்மை அலுவலர் உதவி தோட்டக்கலை அலுவலர் தோட்டக்கலை உதவி இயக்குனர் உள்ளிட்ட பதவிகளுக்கு ஏப்ரல் 17, 18, 19 ஆகிய தேதிகளில் நடத்த தமிழக அரசு திட்டமிடப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. பல்வேறு தேர்வுகளை கொரோனா வைரஸ் காரணமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளதை அடுத்து டிஎன்பிஎஸ்சி தேர்வுகளும் ஒத்தி வைக்கப்படுமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

 

 

 

seithichurul

Trending

Exit mobile version