கிரிக்கெட்

இங்கிலாந்து செல்லும் இந்திய அணி அஸ்வின் இல்லை: அதிர்ச்சி காரணம்

Published

on

இங்கிலாந்து நாட்டுக்கு எதிராக இந்திய அணி ஜூலை 1ஆம் தேதியை 5வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் விளையாட உள்ள நிலையில் இந்த போட்டிக்கு செல்லும் இந்திய அணியில் ரவிச்சந்திரன் அஸ்வின் இல்லை என்ற தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

இந்திய கிரிக்கெட் வீரர்களில் முன்னணி பந்துவீச்சாளரான ரவிச்சந்திரன் அஸ்வினுக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளதால் அதன் காரணமாக இங்கிலாந்து செல்லவில்லை என்றும் பிசிசி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

கொரோனா வைரசால் பாதிக்கப்பட்ட அஸ்வின் தற்போது தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார் என்றும் அவர் அனைத்து கொரோனா விதிமுறைகளையும் கடைபிடித்து வருகிறார் என்றும் அவருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு நீங்கிய பின்னர் இங்கிலாந்து செல்லும் இந்திய அணியுடன் அவர் இணைவார் என்று கூறப்படுகிறது.

ஏற்கனவே இந்திய அணி கடந்த 16ஆம் தேதி இங்கிலாந்துக்குச் சென்று விட்ட நிலையில் அஸ்வின் பின்னர் இணைவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஜூலை 1ஆம் தேதி நடைபெறும் இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டி தொடங்குவதற்கு முன்னர் அஸ்வின் பூரண நலம் பெற்றால் அவர் அணியில் இணைவார் என்று நம்புகிறோம் என பிசிசிஐ நிர்வாகி ஒருவர் தெரிவித்துள்ளார்.

இந்திய அணி ஜூன் 24-ஆம் தேதி முதல் லீசெஸ்டர் அணியுடன் 4 நாள் பயிற்சி ஆட்டத்தில் விளையாடுகிறது. இந்த டெஸ்ட் போட்டிக்கு இந்திய அணியின் கேப்டனாக ரோகித் சர்மா செயல்படுவார் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

 

seithichurul

Trending

Exit mobile version