கிரிக்கெட்

கபில்தேவ் சாதனையை சமன்செய்த அஸ்வின்!

Published

on

நேற்று கபில் தேவின் சாதனையை ஜடேஜா முறியடித்த நிலையில் இன்று கபில் தேவின் சாதனையை அஸ்வின் சமன் செய்து உள்ளார்.

டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் 7-வது விக்கெட்டுக்கு களமிறங்கி 163 ரன்கள் எடுத்து சாதனை செய்தார் கபில்தேவ். இந்த சாதனையை நேற்று 7-வது விக்கெட்டுக்கு களமிறங்கிய ஜடேஜா 175 ரன்கள் எடுத்து கபில்தேவ் சாதனையை முறியடித்தார்.

இந்த நிலையில் டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக விக்கெட் எடுத்த கபில்தேவ் சாதனையை இன்று ரவிச்சந்திரன் அஸ்வின் சமன் செய்தார். இதுவரை டெஸ்ட் கிரிக்கெட்டில் 434 விக்கெட்டுகள் எடுத்திருந்த கபில் தேவின் சாதனையை அஸ்வின் இன்று சமன் செய்துள்ளதை அடுத்து அவருக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது .

மேலும் டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் அதிக விக்கெட் எடுத்த பந்துவீச்சாளர் பட்டியலில் முதலிடத்தில் அனில் கும்ப்ளே இருக்கும் நிலையில் அவருக்கு அடுத்ததாக மிக அதிக விக்கெட்டுகள் எடுத்த பந்துவீச்சாளர் என்ற பட்டியலில் அஸ்வின் இரண்டாவது இடத்தில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது,

 

seithichurul

Trending

Exit mobile version