கிரிக்கெட்

INDvENG- டெஸ்ட் தொடருக்கு முன்னர் இந்திய வீரர்களிடம் எழுச்சி உரையாற்றிய ரவி சாஸ்திரி!

Published

on

இந்திய கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி, இந்திய வீரர்களிடம் எழுச்சி உரையாற்றிய சம்பவம் கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் கவனம் பெற்றுள்ளது.

இந்தியா – இங்கிலாந்து கிரிக்கெட் அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் தொடர் வரும் 5 ஆம் தேதி ஆரம்பிக்கிறது. 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் இரண்டு போட்டிகள் சென்னையில் உள்ள எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் நடைபெறுகிறது. இதனால் இரு நாட்டு வீரர்களும் சென்னையில் கடந்த சில நாட்களாக முகாமிட்டுள்ளனர். நேற்று முதல் இந்திய வீரர்கள், தங்களது வலைப் பயிற்சியை ஆரம்பித்தனர். இந்நிலையில் அவர்களுக்கு முன்னர் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி, ஆவேசமான எழுச்சி உரை ஆற்றியுள்ளார்.

சில நாட்களுக்கு முன்னர் தான் இந்தியா – ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் தொடர் முடிவுக்கு வந்தது. 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை இந்தியா, 2 – 1 என்ற ரீதியில் கைப்பற்றி சாதனைப் படைத்தது. அந்த வெற்றிக் களிப்பில் இந்திய அணி வீரர்கள் இருந்துவிடக் கூடாது என்பதற்காக ரவி சாஸ்திரி, இப்படி உரையாற்றி இருக்கலாம் எனப் பார்க்கப்படுகிறது.

இது குறித்தான புகைப்படங்களை இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியமான பிசிசிஐ பகிர்ந்துள்ளது.

அந்தப் புகைப்படங்கள் இதோ:

author avatar
seithichurul

Trending

Exit mobile version