கிரிக்கெட்

INDvAUS: முதல் டெஸ்டில் மண்ணைக் கவ்விய இந்தியா… ரவி சாஸ்திரியை வெளுத்துவாங்கும் நெட்டிசன்ஸ்!

Published

on

இந்தியாஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாவது இன்னிங்ஸில் இந்தியா, 36 ரன்கள் எடுத்து சொதப்பியது. டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றிலேயே இந்திய அணி எடுத்த மிக குறைந்தபட்ச ஸ்கோர் இதுதான். போட்டியையும் இந்திய அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் தோற்றது. இதனால் இந்திய கிரிக்கெட் அணி மீதும், அதன் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி மற்றும் கேப்டன் விராட் கோலி மீதும் கடும் விமர்சனங்கள் எழுந்து வருகின்றன. 

குறிப்பாக இந்தப் போட்டியில் அணித் தேர்வு அந்தளவுக்கு சரியாக அமையவில்லை என்று பலரும் தெரிவித்து வருகின்றனர். முதல் டெஸ்ட் போட்டி நடப்பதற்கு முன்னர் ஆஸ்திரேலிய ஏ அணியுடன் இந்திய கிரிக்கெட் அணி பயிற்சிப் போட்டியில் ஈடுபட்டது. இந்தப் போட்டியில் சுப்மன் கில் மற்றும் ரிஷப் பன்ட் ஆகியோர் நன்றாக விளையாடினார்கள். இவர்களுக்கு முதல் டெஸ்டில் வாய்ப்பளிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது. குறிப்பாக சுப்மன் கில், கண்டிப்பாக தொடக்க வீரராக களமிறங்குவார் என ரசிகர்கள் கருதினார்கள். 

ஆனால், அவருக்கு பதிலாக பிரித்வி ஷா களமிறங்கினார். ஷா, இரு போட்டிகளிலும் ஒற்றை இலக்கு ரன்கள் எடுத்து வெளியேறியது இந்திய அணிக்கு மிகப் பெரிய தலைவலியாக மாறியது. தோல்விக்கும் அது முக்கிய பங்காற்றிவிட்டது. இந்நிலையில் ட்விட்டரில் நெட்டிசன்கள் ரவி சாஸ்திரியை வறுத்தெடுத்து வருகின்றனர். குறிப்பாக அவரை பயிற்சியாளர் பொறுப்பிலிருந்து நீக்க வேண்டும் என்று குரல்கள் எழுந்து வருகின்றன.

சில ட்வீட் பதிவுகள் இதோ:

Trending

Exit mobile version