கிரிக்கெட்

விடை பெறுகிறார் ரவிசாஸ்திரி: அடுத்த பயிற்சியாளர் ராகுல் டிராவிட்?

Published

on

இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளராக இருக்கும் ரவி சாஸ்திரி அவர்கள் ஒப்பந்தத்தை நீடிக்க விரும்பவில்லை என்றும் அவர் விரைவில் விடை பெறுவார் என்றும் ஆங்கில நாளேடு ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தற்போது இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளராக இருக்கும் ரவி சாஸ்திரி மற்றும் பந்துவீச்சு பயிற்சியாளராக இருக்கும் பாரத் அருண், பீல்டிங் பயிற்சியாளராக இருக்கும் ஸ்ரீதர், பேட்டிங் பயிற்சியாளராக இருக்கும் விக்ரம் ராத்தோர் ஆகிய நால்வரும் தங்கள் ஒப்பந்தத்தை நீடிக்க விரும்பவில்லை என்றும் இந்திய கிரிக்கெட் அணியில் இருந்து விடைபெற இருப்பதாகவும் அந்த ஆங்கில நாளேடு செய்தி வெளியிட்டுள்ளது.

இங்கிலாந்திற்கு கோபமாக கிளம்பிய ராகுல் டிராவிட்

இதனை அடுத்து இந்திய கிரிக்கெட் அணியின் அடுத்த பயிற்சியாளராக ராகுல் டிராவிட் நியமனம் செய்யப்பட அதிக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. ராகுல் டிராவிட் சமீபத்தில் இலங்கை சென்ற இந்திய அணியின் பயிற்சியாளராக இருந்தார் என்பதும் அவருடைய செயல்பாடு மிக அபாரமாக இருந்ததை அடுத்து அவர் இந்திய சீனியர் அணியின் பயிற்சியாளராக இருக்க அதிக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

மேலும் பிசிசிஐ தலைவராக இருக்கும் சவுரவ் கங்குலி, ராகுல் டிராவிட் அவர்களுக்கு மிகவும் நெருக்கமானவர் என்பதால் ராகுல் திராவிட்டை அவர் நியமனம் செய்ய உதவி செய்வார் என்றும் கூறப்பட்டு வருகின்றது.

இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளர் பதவியில் இருந்து விடை பெறப் போகும் ரவி சாஸ்திரியின் பயிற்சியில் தான் இந்தியா இரண்டு முறை ஆஸ்திரேலியாவில் தொடரை வென்றது என்பதும், ஐசிசி சம்பியன்ஸ் டிராபியில் இறுதிப் போட்டிக்கு முன்னேறியது என்பதும் உலக கோப்பையில் அரையிறுதி வரை முன்னேறியது என்பதும் குறிப்பிடத்தக்கது

seithichurul

Trending

Exit mobile version