பிற விளையாட்டுகள்

இந்திய குத்துச்சண்டை வீரரை கடித்து காயமாக்கிய கஜகஸ்தான் வீரர்: இறுதிப்போட்டியில் விளையாடுவாரா?

Published

on

ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் ஒலிம்பிக் போட்டிகள் கடந்த சில நாட்களாக நடைபெற்று வரும் நிலையில் நேற்று நடந்த 57 கிலோ எடை கொண்ட குத்துச்சண்டை போட்டியில் இந்தியா மற்றும் கஜகஸ்தான் வீரர்கள் மோதினர்.

இந்த போட்டியில் இந்திய வீரர் ரவிதாகியா மிகவும் பின்தங்கியிருந்த நிலையில் கடைசி நேரத்தில் ஆவேசமாக விளையாடி கஜகஸ்தான் வீரரை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றார்.

இந்த நிலையில் நேற்றைய போட்டியின் போது கஜகஸ்தான் வீரர் இந்திய வீரரின் கிடுக்குப் பிடியில் இருந்து தப்பிப்பதற்காக அவருடைய கையை பற்களால் கடித்து காய்ப்படுத்தினார். இதனால் இந்திய வீரர் கையில் காயம் ஏற்பட்டது. ஆனால் காயத்தையும் பொருட்படுத்தாமல் வெற்றியை மட்டுமே குறிக்கோளாக கொண்டு ரவிதாகியா தொடர்ந்து விளையாடி வெற்றி பெற்றார். இந்த நிலையில் ரவிதாகியாவை கையில் கடித்து காயம் ஏற்பட செய்த கஜகஸ்தான் வீரர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

இதனை அடுத்து இன்று நடைபெறும் இறுதிப் போட்டியில் அவர் விளையாடுவாரா என்ற அச்சம் ஏற்பட்டது. இந்த நிலையில் ரவி தாகியா நல்ல உடல் நலத்துடன் இருக்கிறார் என்றும் கண்டிப்பாக அவர் இன்று இறுதிப்போட்டியில் விளையாடுவார் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது
இன்றைய போட்டியில் ரவிதாகியா, ரஷ்ய வீரர் உடன் மோத உள்ளார் என்பதும் இன்றைய போட்டியில் அவர் வெற்றி பெற்றால் தங்கம் வெல்வார் என்றும் தோல்வி அடைந்தால் வெள்ளி பதக்கம் வெல்வார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் இந்திய வீரர் ரவிதாகியா இன்றைய போட்டியில் வென்று தங்கம் வெல்ல ரசிகர்கள் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

seithichurul

Trending

Exit mobile version