வேலைவாய்ப்பு

ரேசன் கடை வேலைகள்: 10ம் வகுப்பு தேர்ச்சி போதுமான வேலை வாய்ப்பு – உடனே விண்ணப்பிக்கவும்!

Published

on

ரேசன் கடையில் வேலை: 10ம் வகுப்புத் தேர்ச்சி போதும்!

தமிழக கூட்டுறவுத் துறையின் கீழ் உள்ள ரேசன் கடைகளில் விற்பனையாளர்கள் மற்றும் கட்டுநர்கள் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்நிலையில், 2,000 காலிப்பணியிடங்கள் உடனடியாக நிரப்பப்படவுள்ளன.

சென்னை மாவட்டத்தில் மட்டும் 348 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது. விற்பனையாளர் பதவிக்கு 12ம் வகுப்பு தேர்ச்சியும், கட்டுநர் (Packer) பதவிக்கு 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களும் விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பிக்க வேண்டிய தேதி:

விண்ணப்பதாரர்கள் www.drbchn.in என்ற இணையதளம் மூலம், 07.11.2024 தேதிக்குள், Online வழியாக விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பக் கட்டணம்:

விற்பனையாளர் பதவிக்கு ரூ.150/- மற்றும் கட்டுநர் பதவிக்கு ரூ.100/- ஆகும். சில பிரிவினருக்கு கட்டண விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

தேர்வு முறை:

கல்வி தகுதி அடிப்படையில் பெறப்பட்ட மதிப்பெண்கள் மற்றும் நேர்முகத் தேர்வின் மதிப்பெண்களின் அடிப்படையில் தேர்வு நடைபெறும். இனச்சுழற்சி மற்றும் அரசாணைகள் அடிப்படையில் முன்னுரிமை வழங்கப்படும். தமிழில் பேசவும், எழுதவும் தெரிந்திருக்க வேண்டும்.

 

Poovizhi

Trending

Exit mobile version