தமிழ்நாடு

கைரேகை பதிவில்லை என்றாலும் ரேசன் பொருட்கள் கிடைக்கும்: தமிழக அரசின் சூப்பர் உத்தரவு

Published

on

ரேஷன் கடைகளில் பொருள்கள் வாங்க வருபவர்களின் கைரேகை பதிவில் சிக்கல் ஏற்பட்டாலும் அவர்களுக்கு ரேஷன் பொருட்கள் தங்கு தடையின்றி வழங்க வேண்டும் என அதிகாரிகள் உத்தரவிட்டு உள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

ரேஷன் கடைகளில் அத்தியாவசியப் பொருள்கள் பெரும் அட்டைதாரர்கள் கைரேகையை பதிவு செய்தால் மட்டுமே பொருள்கள் கிடைக்கும் என்ற முறை கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் அறிமுகம் செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

எனவே ரேஷன் கடையில் அரிசி, பருப்பு, கோதுமை உட்பட அத்தியாவசிய பொருட்களை வாங்க வருபவர்கள் சில நேரங்களில் கைரேகை பதிவில் சிக்கல் ஏற்படுகிறது. குறிப்பாக வயதானவர்களுக்கு ரேஷன் கடைகளில் கைரேகை பதிவு செய்யும்போது கைரேகை சரியாக பதிவதில்லை.

கைரேகை சரியாக பதிவு செய்யப்படாத ரேஷன் அட்டைதாரர்களுக்கு பொருட்கள் கிடைப்பதில்லை என்றும் ரேஷன் கடை ஊழியர்களுக்கு கைரேகை பதிவு இல்லாமல் பொருட்களை வழங்கக்கூடாது என அதிகாரிகள் உத்தரவிட்டு உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதனால் பல ரேஷன் கடைகளில் அத்தியாவசிய பொருட்களை வாங்க முடியாத நிலை ஏற்பட்டதாக கூறப்பட்டது. இந்த நிலையில் இந்த பிரச்சனையை சரி செய்ய தமிழக அரசு சூப்பர் உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது. அதன்படி ரேஷன் கடைகளில் கைரேகை பதிவு பதிவு செய்யப்படாத நேரத்தில் இயந்திரத்தில் குடும்ப அட்டை எண்ணை பதிவு செய்து உரிய பதிவேட்டில் ஒப்புதல் பெற்று குடும்ப அட்டைதாரர்களுக்கு அத்தியாவசிய பொருட்களை தங்கு தடையின்றி உடனடியாக வழங்க வேண்டுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த உத்தரவால் கைரேகை பதிவு இல்லை என்றாலும் குடும்ப அட்டை எண்ணை இயந்திரத்தில் பதிவு செய்து ரேஷன் பொருள்களை பொதுமக்கள் பெற்று வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

 

seithichurul

Trending

Exit mobile version