சினிமா

ஆதாரங்களை வெளியிடுவேன்: சின்மயி மீது ராதாரவி ஆவேசம்!

Published

on

பிரபல பாடகியும் டப்பிங் கலைஞருமான சின்மயி மீடூ விவகாரத்தில் பரபரப்பாக பேசப்பட்டவர். இவர் பிரபல கவிஞர் வைரமுத்து மீது பாலியல் குற்றச்சாட்டை வைத்து அனைவரையும் அதிரவைத்தார். தொடர்ந்து வைரமுத்துவுக்கு எதிராக சின்மயி செயல்பட்டுவந்த நிலையில் அவரை டப்பிங் சங்கத்தில் இருந்து அதிரடியாக நீக்கினார் ராதாரவி.

இதனால் டப்பிங் வாய்ப்பையும், பாடல் பாடும் வாய்ப்பையும் ஒரே நேரத்தில் இழந்தை சின்மயி ராதாரவி மீது தனது கோபத்தை திருப்பினார். ராதாரவி தனது பெயருக்கு முன்னால் போடும் டத்தோ என்ற கௌரவ பட்டம் குறித்து டுவிட்டரில் பதிவு ஒன்றை வெளியிட்டார். அந்த பட்டம் போலியான பட்டம் என்று ராதாரவியை விமர்சித்த சின்மயி அப்படியொரு பட்டத்தை மலேசிய அரசு ராதாரவிக்கு வழங்கவில்லை என அந்த அரசு செயலாளர் எழுதிய கடிதத்தை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தினார்.

இந்நிலையில் இது குறித்து பேசிய ராதாரவி, வைரமுத்துவை பிளாக் மெயில் பண்ண பார்த்தார் சின்மயி முடியவில்லை. இப்போது என்னிடம் வந்து இருக்கிறார். மலேசியாவில் டத்தோ பட்டம் யார் யார் வழங்குகிறார்கள் என்ற விவரம் கூட தெரியாமல் இருக்கிறார். நான் பட்டம் பெற்றதற்கான ஆதாரங்கள் இருக்கின்றன. தற்போது புதுக்கோட்டையில் இருக்கிறேன்.

சில நாட்களில் சென்னை வந்துவிடுவேன். பின்னர் ஆதாரங்களை வெளியிடுவேன். சின்மயி வெளியிட்டு இருக்கும் கடிதமே போலியாக இருக்கும் என்று சந்தேகிக்கிறேன். சின்மயியை சும்மா விடப்போவதில்லை. எனக்கு பட்டம் தந்தவர்களே அவர் மீது நடவடிக்கை எடுப்பார்கள் என்றார் ஆவேசமாக.

seithichurul

Trending

Exit mobile version