சினிமா செய்திகள்

பாலிவுட்டுக்கு செல்கிறான் ராட்சசன்!

Published

on

ராம்குமார் இயக்கத்தில் விஷ்ணு விஷால் நடிப்பில் கடந்த வாரம் ரிலீசான ராட்சசன் படம் மாபெரும் வெற்றி பெற்றதை தொடர்ந்து பாலிவுட்டில் ரீமேக் செய்யவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஆக்சஸ் ஃபிலிம் ஃபேக்டரி தயாரிப்பில் முண்டாசுப்பட்டி படத்தை இயக்கிய ராம்குமார், பக்கவான சைக்கோ த்ரில்லர் படமாக ராட்சசனை இயக்கியுள்ளார். இப்படத்தில், விஷ்ணு விஷால், அமலாபால், முனிஷ்காந்த், காளி வெங்கட், ராதாரவி, நிழல்கள் ரவி எனப் பலரும் நடித்திருந்தனர்.

பள்ளிக்குச் செல்லும் இளம் பெண்களைக் கடத்தி கொடூரமாகக் கொலை செய்யும் மேஜிக் மேன் ராட்சசனை விஷ்ணு விஷால், இயக்குநராகக் கனவு கண்டபோது சேமித்து வைத்த உலகளவில் உள்ள சைக்கோக்களின் ஆவணங்களைக் கொண்டு இந்தச் சைக்கோ ராட்சனை அடையாளம் காண்கிறான். அது ராட்சசனா இல்லை ராட்சசியா என்ற ட்விஸ்ட் கொடுத்துக் கிளாப்ஸ் அள்ளுகிறார் இயக்குநர் ராம்குமார். மீண்டும் அது ராட்சசன் தான் என ட்விஸ்ட் மேல் ட்விஸ்ட் வைத்துச் சீட் எட்ஜ் த்ரில்லரை பக்கா கமர்ஷியல் பேக்கேஜுடன் கொடுத்து ஆல் செண்டர் ஹிட் அடித்துள்ளார்.

இந்நிலையில், இப்படத்தைப் பாலிவுட்டில் ரீமேக் செய்ய ஒரு நிறுவனம் முன்வந்துள்ளதாகவும், பாலிவுட்டிலும் விஷ்ணு விஷாலே நாயகனாக நடிக்க அழைத்ததாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன. கோலிவுட்டில் நல்ல கதைகளைத் தேர்வு செய்து நடித்த விஷ்ணுவுக்குப் பாலிவுட்டிலும் ரெட்கார்ப்பெட் விரிக்கட்டும்!

seithichurul

Trending

Exit mobile version