தமிழ்நாடு

யானையை சுண்டெலி தடுத்திட முடியுமா? கருப்புக்கொடி குறித்து தமிழிசை கேள்வி!

Published

on

பிரதமர் மோடி தமிழகம் வரும்போதெல்லாம் அவருக்கு எதிர்ப்பு கிளம்புகிறது. கருப்புக்கொடி காட்டுவது, கோ பேக் மோடி என டுவிட்டரில் உலக அளவில் ட்ரெண்ட் ஆக்குவது என தமிழர்கள் மோடிக்கு எதிராக தீவிரமாக உள்ளனர்.

இந்நிலையில் பிரதமர் மோடிக்கு கருப்புக்கொடி காட்டுவது கீழ்த்தரமான செயல் என மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியிருந்த நிலையில், தற்போது பாஜக தமிழக தலைவர் தமிழிசை, சின்ன கூட்டம்தான் பிரதமர் மோடிக்கு கருப்புக்கொடி காட்டுவதாகவும், யானையை சுண்டெலி தடுக்க முடியுமா எனவும் கேள்வியெழுப்பியுள்ளார்.

பிரதமர் மோடி வரும் 10-ஆம் தேதி திருப்பூரில் நடக்கும் பாஜக பொதுக்கூட்டத்தில் கலந்துகொள்ள வர உள்ளதால் அதற்கான ஏற்பாடுகளை கவனிக்க நேற்று தமிழிசை திருப்பூர் வந்தார். அப்போது கோவையில் செய்தியாளர்களை சந்தித்த தமிழிசை, மோடி எங்கு வந்தாலும் கருப்புக்கொடி காட்டுவோம் என்று ஒரு கூட்டம் கிளம்பியிருக்கிறது. இந்த சின்ன கூட்டத்தைப் பற்றி நாங்கள் கவலைப்படவில்லை. ஆனால், யானையை சுண்டெலி தடுத்திட முடியும் என்று நினைத்தால் எப்படி முடியும்? என கேள்வி எழுப்பினார்.

தொடர்ந்து பேசிய தமிழிசை, தமிழ்நாட்டுக்கு வந்து திட்டங்களை அறிவிப்போம் என்று நாங்கள் சொல்கின்றோம். ஆனால் வைகோ போன்றவர்கள் கருப்புக்கொடி காட்டுவோம் என்று சொல்கின்றனர். மக்களுக்கு திட்டங்களை ஆரம்பித்து வளர்ச்சி பாதைக்கு தமிழகத்தை எடுத்துச் செல்லும் மோடி வேண்டுமா கிளர்ச்சி பாதைக்கு அழைத்துச் செல்லும் கருப்புக்கொடி காட்டும் தலைவர்கள் வேண்டுமா என்பதை மக்கள் முடிவு செய்வார்கள். தமிழக மக்கள் பாஜகவின் பக்கம் நிற்பார்கள். 2019 தேர்தல் அதை நிரூபிக்கும் என்றார்.

seithichurul

Trending

Exit mobile version