சினிமா செய்திகள்

சின்ன ஹீரோக்களுக்கு நோ சொல்லும் ராஷ்மிகா?

Published

on

பல முன்னனி ஹீரோக்களுடன் நடித்து வருவதால் சின்ன ஹீரோக்களுடன் நடிக்க நடிகை ராஷ்மிகா மந்தனா மறுத்து வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

விஜய் தேவரகொண்டாவுடன் இணைந்து கீதா கோவிந்தம், டியர் காம்ரேட் ஆகிய படங்களில் நடித்த ராஷ்மிகாவின் மார்கேட் தற்போது ஜெட் வேகத்தில் உயர்ந்து விட்டது. தற்போது பாக்கியராஜ் கண்ணன் இயக்கத்தில் கார்த்தியுடன் ஒரு படத்திலும், தெலுங்கில் மகேஷ் பாபுவுடன் ஒரு படத்திலும் நடித்து வருகிறார் ராஷ்மிகா.

மேலும் அல்லு அர்ஜூனுடன் ஒரு படத்திலும் விஜயுடன் ஒரு படத்திலும் நடிக்கயிருப்பதாக கூறப்படுகிறது. இவ்வாறு டாப் ஹீரோக்களுடன் நடிக்கும் ராஷ்மிகா வளர்ந்துவரும் நடிகர்களுடன் நடிக்க மறுத்து வருகிறாராம்.

seithichurul

Trending

Exit mobile version