சினிமா செய்திகள்

அஜித், விஜய்யின் அடுத்த படங்களில் ஒரே நடிகை தான் ஜோடியா? டபுள் ஜாக்பாட்!

Published

on

அஜித் மற்றும் விஜய் நடிக்கவிருக்கும் அடுத்த படங்களில் ஒரே நடிகை கதாநாயகியாக நடிக்க இருக்கிறார் என்ற தகவல் திரையுலகில் பெரும் ஆச்சரியத்தை அளித்துள்ளது.

அஜித் நடிக்கவிருக்கும் அடுத்த திரைப்படமான அஜித் 61 என்ற படத்தின் படப்பிடிப்பு வரும் ஏப்ரல் மாதம் தொடங்க உள்ளது. இந்த படத்திற்காக சென்னை அண்ணாசாலை செட் போடப்பட்டு வருவதாகவும் மிகவும் பிரமாண்டமாக இந்த படம் உருவாக இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

அதேபோல் தளபதி விஜய் நடிக்கவிருக்கும் அடுத்த திரைப்படமான தளபதி 66 என்ற திரைப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

rashmikaஇந்த நிலையில் தளபதி 66 திரைப்படத்தில் நாயகியாக ராஷ்மிகா மந்தனா நடிக்க இருப்பதாக ஏற்கனவே தகவல் வெளியான நிலையில் இந்த தகவல் கிட்டதட்ட உறுதி செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் அஜீத் நடிக்கும் அஜித் 61 திரைப்படத்திலும் ராஷ்மிகா மந்தனா தான் கதாநாயகி என்று கூறப்படுகிறது. இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதற்கு முன்னர் விஜய் நடித்த புலி திரைப்படம் மற்றும் அஜித் நடித்த வேதாளம் திரைப்படம் ஒரே நேரத்தில் உருவாக்கப்பட்ட போது இரு படங்களிலும் ஸ்ருதிஹாசன் தான் நாயகியாக நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. அஜித் விஜய் ஆகிய இருவரது படங்களிலும் ஒரே நேரத்தில் நாயகியாக நடிக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளதால் ராஷ்மிகா மந்தனா டபுள் ஜாக்பாட் உள்ளதாக கூறப்படுகிறது.

 

Trending

Exit mobile version