சினிமா செய்திகள்

தளபதி 65 படத்தில் விஜய்க்கு ஜோடி இவர்தான்!

Published

on

தளபதி 65 படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிக்க, கோலமாவு கோகிலா நெல்சன் இயக்குவது அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.

இதை அடுத்து இந்த படத்தில் தளபதி 65-ல் விஜய்க்கு ஜோடி யாரு என்ற கேள்வியும் ரசிகர்கள் மத்தியில் எழுந்தது.

தற்போது கிடைத்துள்ள தகவலின் படி தளபதி 65 படத்தில், விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடிக்க அதிக வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது. மேலும் டாக்டர் படத்தில் பணியாற்றிய அதே தொழில்நுட்ப குழுவினர் தளபதி 65-ல் இருப்பார்களாம். தற்போதைக்கு அனிருத் இசை அமைக்கிறார் என்பது உறுதி அதிகாரப்பூர்வமாக உறுதி செய்யப்பட்டுள்ளது.

கன்னடத்தில் வெளியாகி மெகா ஹிட்டான கிரிக் பார்ட்டி, தெலுங்கில் கீதா கோவிந்தம், டியர் காம்ரேட் உள்ளிட்ட சூப்பர் ஹிட் படங்களிலும் ராஷ்மிகா மந்தனா நடித்துள்ளார்.

தமிழில் இதுவரை கார்த்தி நடிப்பில் உருவாகி வரும் சுல்தான் படத்தில் மட்டும் ராஷ்மிகா நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

seithichurul

Trending

Exit mobile version