சினிமா செய்திகள்

விஜய்சேதுபதிக்கு ஜோடியான ராஷி கன்னா!

Published

on

இமைக்கா நொடிகள் படத்தில் விஜய்சேதுபதியின் மனைவி நயன்தாராவின் தம்பி அதர்வாவுக்கு ஜோடியாக தமிழ் சினிமாவில் அறிமுகமான நடிகை ராஷி கன்னா, தற்போது விஜய்சேதுபதிக்கு ஜோடியாக புதிய படம் ஒன்றில் நடிக்கவுள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

இமைக்கா நொடிகள் படத்தை தொடர்ந்து ஜெயம் ரவிக்கு ஜோடியாக ராஷி கன்னா நடித்த அடங்கமறு திரைப்படம் மாபெரும் வெற்றியை பெற்ற நிலையில், ராஷி கன்னாவின் காட்டில் அதிர்ஷ்ட மழை கொட்டத் துவங்கிவிட்டது.

சிம்புவின் வாலு மற்றும் விக்ரமின் ஸ்கெட்ச் படங்களை இயக்கிய விஜய் சந்தர் இயக்கத்தில் விஜய்சேதுபதி நடிக்கவுள்ள புதிய படத்தில் தான் அவருக்கு ஜோடியாக ராஷி கன்னா இணைந்துள்ளார்.

மேலும், இந்த படத்தில் காமெடி கதாபாத்திரத்தில் நடிகர் சூரி நடிக்கிறார். விஜயா புரொடக்‌ஷன்ஸ் தயாரிப்பில் உருவாகவுள்ள இந்த படத்திற்கான தலைப்பை படக்குழு இன்னும் அறிவிக்கவில்லை.

seithichurul

Trending

Exit mobile version