சினிமா செய்திகள்

கருப்பு வெள்ளையிலும் கலக்கலாக இருக்கும் ராஷி கண்ணா!

Published

on

இமைக்கா நொடிகள் படத்தில் அதர்வாவுக்கு ஜோடியாக நடித்து தமிழ் சினிமாவுக்கு அறிமுகமான நடிகை ராஷி கண்ணா, தமிழ் சினிமாவின் இளம் முன்னணி நாயகியாக மாறியுள்ளார்.

இமைக்கா நொடிகள் படத்தை தொடர்ந்து ஜெயம் ரவியுடன் அடங்கமறு, விஷாலுடன் அயோக்யா என அவர் நடித்த அடுத்தடுத்த போலீஸ் படங்கள் மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளது. அடுத்ததாக விஜய் சந்தர் இயக்கத்தில் விஜய்சேதுபதி நடிக்கும் சங்கத்தமிழன் படத்தில் விஜய்சேதுபதிக்கு ஜோடியாகியுள்ளார்.

இந்நிலையில், சமீபத்தில் ராஷி கண்ணா நடத்திய போட்டோஷூட்டில் எடுக்கப்பட்ட கருப்பு வெள்ளை புகைப்படம் இணையத்தில் ரசிகர்கள் மத்தியில் வைரலாக ஷேர் செய்யப்பட்டு வருகிறது.

seithichurul

Trending

Exit mobile version