சினிமா செய்திகள்

10 வருடத்துக்கு முன் ராஷி கண்ணாவா இது?

Published

on

பேஸ்புக்கில் தற்போது டிரெண்டிங்காக வலம் வரும் 10 இயர் சேலஞ்ச் ஹேஷ்டேகில், நடிகர்கள், விளையாட்டு வீரர்கள், பொதுமக்கள் என தங்களது பத்தாண்டு பழைய புகைப்படத்தையும், தற்போதுள்ள புகைப்படத்தையும் பதிவிட்டு வருகின்றனர்.

இந்நிலையில், இமைக்கா நொடிகள், அடங்கமறு படங்களில் நடித்த ராஷி கண்ணாவும் இந்த சவாலை மேற்கொண்டார். தான் பள்ளியில் படித்த புகைப்படத்தையும் தற்போது நாயகியாக உள்ள புகைப்படத்தையும் பதிவிட்டுள்ளார்.

அந்த பழைய புகைப்படத்தில் மிகவும் குண்டு பெண்ணாக இருக்கும் ராஷி கண்ணா, தான் அதற்காக அப்போது கலாய்க்கப்பட்டதாகவும், அந்த வெறியில் தான் தான் இவ்வாறு மாடலாக மாறி நாயகியாக வந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

ராஷி கண்ணாவை போல பல பிரபலங்களும் தங்களது பழைய புகைப்படங்களை இணையத்தில் பதிவிட்டு வருகின்றனர். இது போன்ற திடீர் சவால்கள் முளைக்க உண்மையான காரணங்கள் என்னவென்பது அந்த பெரு நிறுவனங்களுக்கு மட்டுமே வெளிச்சம்.

Trending

Exit mobile version