பல்சுவை

என்னது இது.. கங்காரு குட்டி இப்படி வித்தியாசமாக பொறந்திருக்கு?

Published

on

நியூயார்க் நகரில் கங்காருவுக்கு வெள்ளை நிறத்தில் குட்டி ஈன்ற சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

பொதுவாக கங்காருக்கள் அதன் வயிற்றில் உள்ள பையில் தான் குட்டிகளை ஈனும். எனவே, அது வெளியுலகத்திற்கு தெரியாது. அவ்வாறு வயிற்றுப் பையில் இருக்கும் குட்டிக்கு காது கேட்காது, கண்கள் தெரியாது, உரோமங்கள் இருக்காது.

அந்த வகையில், கடந்த 7 மாதங்களுக்கு முன்பு நியூயார்க்கில் உள்ள அனிமெல் அட்வெஞ்சர் பூங்காவில்  சிவப்பு சாம்பல் நிறத்திலான கங்காரு ஒன்று குட்டியை ஈன்றது. அது அப்படியே கங்காருவின் வயிற்றுப் பகுதியில் வளர்ந்து வந்தது.

இந்தநிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்பு அந்தக் கங்காருவின் வயிற்றுப் பகுதியில் இருந்து கங்காருக்குட்டி வெளியே வந்தது. அதனைக் கண்ட பூங்கா ஊழியர்கள் அதிர்ச்சியடைந்தனர். ஏனென்றால் கங்காருக்கு சிறிதும் சம்பந்தமே இல்லாமல், வெள்ளை நிறத்தில் பிறந்துள்ளது.

உடனே அது குறித்து உயர் அதிகாரிகளுக்கு தெரிவிக்க, நேரில் ஆய்வு செய்த விலங்கு ஆராய்ச்சியாளர்கள், இது மரபணு மாற்றத்தால் ஏற்பட்டிருக்கலாம் என்றனர். வெள்ளை கங்காருக் குட்டியின் போட்டோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

Trending

Exit mobile version