தமிழ்நாடு

கஜா புயலால் பாதிக்கப்பட்ட தென்னை விவசாயிகளே உங்களுக்கு ஒரு அரிய ஆலோசனை.!

Published

on

தென்னை மரம் கீழே விழுந்து விட்டது என்று வருந்தும் விவசாயிகள் கவனத்திற்கு

எனது அனுபவத்தில் இயற்கை சீற்றங்கள் மற்றும் சிவப்பு கூன் வண்டு தாக்கிய மரங்கள் இவற்றை திரும்பவும் தூக்கி நட்டு குழியில் காப்பர் ஆக்ஸி குளோரைடு 5 கிராம்/ லிட்டர் தண்ணீர் என்ற அளவில் கரைத்து ஊற்றி. பின்னர் நமது soil pro Actor coconut mix இட்டு திரும்பவும் உயிர் பெற வைத்து இருக்கிறோம்.

தென்னையில் ஒவ்வொரு மட்டை கணுவும் வேர் வளர கூடிய இடமாகும். எனவே விழுந்த மரங்களைத் திரும்பவும் நான் பரிந்துரைத்தவாறு நடுங்கள். நட்டு நான்கு திசைகளிலும் கம்பு நங்கூரமிட்டு கட்டினால் 6 மாதங்களுக்குள் வேர் வளர்ச்சி பெறும்.

சாறு வடிதல் நோயால் அழுகிய பகுதிக்கு மேல் துணி சுற்றி IBA ஹார்மோன் 500 பிபிஎம் தெளித்து புது வேர்களை உண்டாக்கி பின்பு அழுகிய பகுதிகளை வேட்டி வேர் வந்த பகுதியை தரையில் நடவும் கூட முடியும்

கட்டிடங்களுக்கு வேண்டி 40 தென்னை மற்றும் பாக்கு மரங்களை இடம் மாற்றி வெற்றிகரமாக வளர்த்துள்ளேன்.

தற்போது முழுவதும் வளர்ந்த தென்னை மரங்களைப் பறித்து அதை ஏற்றுமதி செய்து வளைகுடா நாடுகளில் நடவு செய்து இருக்கிறார்கள்..

மேலும் தகவலுக்கு

ப. பலசுப்பிரமணியன்

தலைமை அறிவியலார்

சக்தி அக்ரி கிளினிக்

மேட்டுப்பாளையம்

+919442253021.

 

author avatar
seithichurul

Trending

Exit mobile version