இந்தியா

டெல்லியை அடுத்து நாடு முழுவதும் தடை செய்யப்படுகிறதா பைக் டாக்ஸி? பரபரப்பு தகவல்

Published

on

பைக் டாக்சியை இயக்கினால் 5000 முதல் 10 ஆயிரம் வரை அபராதம் விதிக்கப்படும் என்றும் பைக் டாக்ஸியை நடத்தும் நிறுவனங்களுக்கு ரூபாய் ஒரு லட்சம் வரை அபராதம் விதிக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது என்பதை ஏற்கனவே பார்த்தோம். இதனால் ஓலா, உபேர், ராபிடோ உள்ளிட்ட நிறுவனங்களுக்கு பெரும் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது.,

ஓலா, உபேர், ராபிடோ உள்ளிட்ட நிறுவனங்கள் டாக்ஸி சேவைகள் மட்டுமின்றி பைக் டாக்ஸி சேவைகளையும் செய்து வருகிறது என்பதும் ஒரே ஒருவர் மட்டும் ஒரு குறிப்பிட்ட இடத்திற்கு செல்ல வேண்டும் என்றால் பைக் டாக்ஸியில் மிகவும் குறைந்த கட்டணத்தில் சென்று வரலாம் என்ற வசதி இருந்தது என்பதும் தெரிந்ததே.

சென்னை உள்பட பல நகரங்களில் ரேபிடோ உள்ளிட்ட நிறுவனங்கள் இந்த பைக் டாக்ஸி வசதிகளை செய்து வந்தாலும் இது குறித்து மாநில அரசுகள் இதுவரை கொள்கைகள் வகுக்கவில்லை என்றும் சட்டத்தை மீறி தான் இவை இயக்கப்பட்டு வருவதாகவும் கூறப்பட்டது.

ஏற்கனவே கர்நாடகா மாநில அரசு பைக் டாக்ஸியை நடத்துவதற்கு தடை விதித்துள்ள ராபிடோ நிறுவனம் பைக் டாக்ஸி நடத்துவதற்கான லைசென்ஸ் கேட்ட நிலையில் அந்த லைசன்ஸ் தருவதற்கு மகாராஷ்டிரா மறுத்துவிட்டது. மகாராஷ்டிரா மாநில அரசு இதுவரை பைக் டாக்சிகளுக்கான கொள்கைகள் வகுக்கப்படவில்லை என்பதால் லைசன்ஸ் வழங்க முடியாது என தெரிவித்ததாக தகவல் வெளியாகி உள்ளன.

bike taxi

இந்த நிலையில் பிப்ரவரி 20 முதல் அதாவது நேற்று முதல் பைக் டாக்ஸி சேவைகளை உடனடியாக நிறுத்துமாறு ஓலா, உபேர் ராபிடோ உள்ளிட்ட நிறுவனங்களுக்கு டெல்லி அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. இதனை மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. முதல் முறையாக விதியை மீறும் பட்சத்தில் 5000 அபராதம் வசூலிக்கப்படும் என்றும் அடுத்த முறை விதியை மீறினால் 10,000 அபராதம் மற்றும் சிறை தண்டனை விதிக்கப்படும் என்றும் டெல்லி அரசு தெரிவித்துள்ளது. அது மட்டுமின்றி ஓட்டுனரின் உரிமம் குறைந்தபட்ச 3 ஆண்டுகளுக்கு சஸ்பெண்ட் செய்யப்படும் என்றும் அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பைக் டாக்ஸி குறித்த விவரங்கள் செயலியில் இருந்தால் மோட்டார் வாகன சட்டத்தின் கீழ் ஒரு லட்சம் அபராதம் விதிக்கப்படும் என்றும் அந்த அறிவிப்பில் தெரிவித்துள்ளது.

இதனை அடுத்து டெல்லியில் பைக் டேக்ஸி சேவைகளை நிறுத்த ஓலா, உபேர் மற்றும் ராபிடோ நிறுவனங்கள் முடிவு செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. ஓலா, பைக் சேவை குறித்த கொள்கை முடிவுகளை மத்திய மாநில அரசுகள் உடனடியாக வகுக்க வேண்டும் என்றும் இது பயணிகளுக்கு மிகவும் எளிதான ஒரு அம்சம் என்பதால் இதனை கருத்தில் கொள்ள வேண்டும் என்றும் வாகன சேவை நிறுவனங்கள் கேட்டுக் கொண்டுள்ளன.

ஆனால் கர்நாடகா, மகாராஷ்டிரா, டெல்லி ஆகிய மாநிலங்களில் தடை செய்யப்பட்டுள்ள பைக் டாக்ஸி சேவையை தமிழ்நாடு உள்பட நாடு முழுவதும் தடை செய்ய திட்டமிடப்பட்டு வருவதாகவும், இதுகுறித்து மத்திய அரசு ஆலோசனை செய்து வருவதாகவும் கூறப்படுகிறது.

seithichurul

Trending

Exit mobile version