இந்தியா

ரேப் இன் இந்தியா சர்ச்சை: மன்னிப்பு கேட்க மாட்டேன் என்று பிடிவாதம் பிடிக்கும் ராகுல் காந்தி!

Published

on

மேக் இன் இந்தியா திட்டத்தை ரே இன் இந்தியா திட்டம் என்று ராகுல் காந்தி கிண்டல் அடித்துப் பேசியதாக மக்களவையில் இன்று பாஜக பெண் எம்பிக்கள் அமளியில் ஈடுபட்டனர்.

மத்திய அமைச்சர் ஸ்மிர்தி இரானி, ராகுல் காந்தியின் இந்த பேச்சு மிக கேவலமான ஒன்று, இதர்கு அவர் மன்னிப்பு கோர வேண்டும் என்று வலியுறுத்தினர்.

அதற்கு மறுப்பு தெரிவித்த திமுக எம்பி கனிமொழி, நாங்கள் மோடியின் மேக் இன் இந்தியா திட்டத்தை வரவேற்கிறோம். அதில் எங்களுக்கு பிரச்சனையும் இல்லை. ஆனால் நடப்பு ஆட்சியில் தொடர்ந்து பாலியல் வன்கொடுமை அதிகரித்து வருகிறது.

அதற்கு பாஜக அரசு எந்த நடவடிக்கையும் எடுத்தது போன்று தெரியவில்லை. இதை காரணம் காட்டி தான் ரேப் இன் இந்தியா என்று ராகுல் காந்தி கூறினார். இதற்கு ராகுல் காந்தி மறுப்பு தெரிவிக்க வேண்டும் என்ற அவசியமில்லை என்று தெரிவித்தார். இருந்தும் தொடர்ந்து பாஜக உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டதால் மக்களவை 30 நிமிடங்கள் வரை ஒத்திவைக்கப்பட்டது.

இந்நிலையில், இந்தியாவில் பெண்கள் பாலியல் வன்கொடுமை செய்யப்படுவதாகப் பேசியதற்கு மன்னிப்பு கேட்கும் பேச்சுக்கே இடமில்லை. மோடி டெல்லியை ரேப் தலைநகர் என கூறியுள்ளார் என்று ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

seithichurul

Trending

Exit mobile version