சினிமா செய்திகள்

Ranjithame Video Song: வெளியான ரஞ்சிதமே வீடியோ பாடல்…. உற்சாகமான விஜய் ரசிகர்கள்!

Published

on

இயக்குநர் வம்சி பைடிப்பள்ளி இயக்கத்தில் நடிகர் விஜய், நடிகை ராஷ்மிகா மந்தனா நடிப்பில் வெளியான திரைப்படம் வாரிசு. இந்த திரைப்படம் ஜனவரி 11ஆம் தேதியன்று பொங்கலன்று விஜய் ரசிகர்களுக்குப் பரிசாக வெளியானது. மேலும் பிரகாஷ்ராஜ், சரத்குமார், பிரபு, ஷாம்,சங்கீதா,ஜெயசுதா, உள்ளிட்ட மிகப்பெரும் நட்சத்திரப் பட்டாளமே இணைந்து நடித்துள்ளனர்.

முதன்முறையாக தமன் விஜய்யுடன் கூட்டணி அமைத்த நிலையில், படத்தின் பாடல்கள் அனைத்தும் நல்ல வரவேற்பைப் பெற்றன. ஏற்கனவே இந்த திரைப்படத்திலிருந்து “ஜிமிக்கி பொண்ணு” “செலிப்ரேஷன் ஆஃப் வாரிசு” ‘தீ தளபதி ஆகிய பாடல்கள் வீடியோ பாடலாக வெளியிடப்பட்டது.

வாரிசு’ திரைப்படத்தின் முதல் சிங்கிளாக வெளியான இந்தப் பாடலை விஜய் – மானசி இணைந்து பாடியிருந்தனர். கடந்த நவம்பர் மாதம் ‘ரஞ்சிதமே’ பாடல் யூடியூபில் வெளியானது முதலே ரசிகர்கர்களின் கவனத்தை ஈர்த்து லைக்ஸ் மற்றும் வ்யூஸை அள்ளி வந்தது.இந்நிலையில் இன்று ரஞ்சிதமே வீடியோ பாடல் வெளியாகி சமூக வலைதளங்களில் பெரும் வரவேற்பைப் பெற்று வருகிறது.

திரையரங்குகளில் வெளியாகி கலவையான விமர்சனங்களைப் பெற்றாலும் பெரும்பான்மையான ரசிகர்களுக்கு ‘வாரிசு’ படம் பிடித்திருந்தது. திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கும் இந்த திரைப்படம் வசூல் ரீதியாக 300 கோடியை எட்டி உள்ளதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளன.

seithichurul

Trending

Exit mobile version