தமிழ்நாடு

எவனுக்கும் பயப்படமாட்டேன், நான் இப்படித்தான் பேசவேண்டும் என்று நீ வரையறை செய்யாதே: பா.ரஞ்சித் ஆவேசம்!

Published

on

சமீபத்தில் ராஜ ராஜ சோழன் குறித்து சர்ச்சைக்குறிய வகையில் கருத்து தெரிவித்து வழக்கில் சிக்கி நீதிமன்றத்துக்கு சென்று முன்ஜாமீன் பெற்றிருக்கும் பிரபல இயக்குநர் பா.ரஞ்சித் தற்போது தான் எவனுக்கும் பயப்படமாட்டேன் எனவும் நான் இப்படித்தான் பேச வேண்டும் என யாரும் வரையரை செய்யக்கூடாது எனவும் பேசியுள்ளார்.

சென்னையில் புத்தக வெளியீட்டு விழாவில் நேற்று பேசிய பா.ரஞ்சித்திடம், ராஜராஜசோழன் பற்றி பேசியதால் மன உளைச்சலுக்கு ஆளாகியிருக்கின்றீர்களா என கேள்வி எழுப்பினர். அதற்கு பதில் அளித்த அவர், நான் பேசியதால் மற்றவர்கள்தான் மன உளைச்சலுக்கு ஆளாகியிருக்கின்றார்கள். ராஜராஜன் உயிரோடு இருந்திருந்தால் என் விமர்சனத்தை ஏற்றுக்கொண்டிருப்பார். வாருங்கள் விவாதம் செய்யலாம் என்று கூறியிருப்பார். ஆனால், ராஜராஜன் பேரன்கள் வேறு வேறு சாதியில் இருப்பதால் அந்த பேரன்கள் எல்லாம் மன உளைச்சல் அடைகிறார்கள்.

ராஜராஜன் பற்றி நான் 13 நிமிடங்கள்தான் பேசினேன். அதை எடுத்து இவ்வளவு பெரிய விவாதத்திற்கு வித்திட்ட மீடியாக்களுக்கு நன்றி. குறிப்பாக நீதிபதிகளுக்கும் நன்றி தெரிவிக்கிறேன். நான் வந்து ஒரு குற்றச்சாட்டை வைக்கிறேன். அதற்கு நீ பதில் சொல்லு. நான் பேசியது மூலமாக வழக்கை தொட்டிருக்கிறேன். எதிர்கொள்ள தயாராக இருக்கிறேன். அதற்காக நான் பேசவில்லை என்று எங்கேயும் மறுக்கவில்லை.

நான் அம்பேத்காரின் வளர்ப்பு, எவனுக்கும் பயப்படமாட்டேன். நான் இப்படித்தான் பேசவேண்டும் என்று நீ வரையறை செய்யாதே. எனக்கு குரலே கிடையாதா? என் குரலை பதிவு செய்வேன். என்னை கோபப்படுத்தாமல் பார்த்துக்கொள்ளுங்கள் என ரஞ்சித் பேசியுள்ளார். முன்னதாக ரஞ்சித்துக்கு நீதிமன்றம் முன்ஜாமீன் வழங்கியபோது நீதிபதி, இதுபோன்று பேசுவதை ரஞ்சித் தவிர்க்க வேண்டும் என்று அறிவுறுத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது.

seithichurul

Trending

Exit mobile version