தமிழ்நாடு

மக்கள் காறி காறித் துப்புகிறார்கள், மண்ணை அள்ளி போட்டு விட்டீர்கள்: பாமகவை விளாசிய ரஞ்சித்

Published

on

மக்களவை தேர்தலுக்காக பாமக அதிமுக,பாஜக உடன் கூட்டணி வைத்துள்ளது. இந்த கூட்டணி மிகவும் கடுமையாக விமர்சிக்கப்பட்டு வருகிறது. குறிப்பாக பாமகவினரே இந்த கூட்டணியை விமர்சித்து வருகின்றனர். இந்நிலையில் பாமகவில் மாநில துணைத்தலைவர் பொறுப்பில் இருந்த நடிகர் ரஞ்சித் பாமகவில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.

இதனையடுத்து செய்தியாளர்களை சந்தித்த ரஞ்சித், ராமதாஸ் மீதும் அன்புமணி ராமதாஸ் மீது பல குற்றச்சாட்டுகளை வைத்தார். கோரிக்கைகளை வைத்து கூட்டணி சேர்ந்ததாக சொல்கிறார்கள். கோரிக்கையை நிறைவேற்றினால்தான் கூட்டணி சேர முடியும் என சொல்லியிருந்தால், என் உயிரை கொடுத்து வேலை பார்த்திருப்பேன். ஆனால் கோரிக்கையை கொடுத்து கூட்டணி சேர்ந்தேன் என்பது இந்த ஆண்டின் மிகச்சிறந்த நகைச்சுவை.

உள்ளாட்சி தேர்தல் வரை நன்றாக இருப்பார்கள் இவர்கள். அதற்கு பின்னர் நாங்கள் வைத்த கோரிக்கைகளை நிறைவேற்றவில்லை, அதனால் கூட்டணியில் இருந்து விலகுகிறோம் என்பார்கள். அவர்களை மிகவும் தரக்குறைவாக விமர்சித்துவிட்டு அவர்களுடனேயே கூட்டணி வைக்கலாமா? இதனை என்னால் ஏற்கமுடியவில்லை. தப்பு யார் செய்தாலும் தப்பு தப்புதான்.

கடந்த சில தினங்களாக நான் ரொம்பவும் மனம் நொந்து, இந்த கூட்டணியில் கொஞ்சமாவதி நியாயம் இருக்கிறதா என என் அம்மா, மனைவி, நண்பர்கள், சாலையில் சந்திப்பவர்கள் என அனைவரிடமும் கேட்டேன். அவர்கள் காறி காறி துப்புகிறார்கள். மாற்றத்தை உருவாக்க வேண்டும் என்றுதான் அன்புமணி பின்னால் இளைஞர்கள் சென்றார்கள். ஆனால் அவர்களின் நினைப்பில் எல்லாம் மண்ணை அள்ளி போட்டு விட்டீர்களே, ஏமாற்றிவிட்டீர்களே என விளாசினார்.

seithichurul

Trending

Exit mobile version