சினிமா

இனிமேல் சந்தோஷ் நாராயணன் வேண்டாம்.. அதிரடி முடிவெடுத்த ரஞ்சித்….

Published

on

ரஞ்சித் இயக்கிய அட்டக்கத்தி திரைப்படம் முதல் அவர் இயக்கிய மெட்ராஸ், காலா, கபாலி, சார்பாட்டா பரம்பரை வரை அத்தனை படங்களுக்கும் இசையமைத்தவர் சந்தோஷ் நாராயணன். மேலும், ரஞ்சித் தயாரிப்பில் தனுஷ் நடித்த கர்ணன் திரைப்படத்திற்கும் அவர்தான் இசையமைத்திருந்தார்.

இந்நிலையில், இருவருக்கும் இடையே தற்போது மன விரிசல் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. சந்தோஷ் நாராயணனின் மகள் தீ உருவாக்கிய எஞ்சாமி பாடலில் முக்கிய பங்கு வகித்த அறிவு அப்பாடல் தொடர்பான விளம்பரங்களில் புறக்கணிக்கப்படுவதாக ரஞ்சித் தெரிவித்த புகார் சந்தோஷ் நாராயணனுக்கும், ரஞ்சித்திற்கும் இடையே விரிசலை ஏற்படுத்தியுள்ளது.

எனவே, இனிமேல் நமது படங்களுக்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்க வேண்டாம். இசைஞானி இளையராஜாவிடம் செல்வோம் என்கிற முடிவுக்கு ரஞ்சித் வந்துள்ளாராம்.

seithichurul

Trending

Exit mobile version