தமிழ்நாடு

சர்ச்சைக்குரிய வகையில் பேசினால் ரஞ்சித்தின் முன்ஜாமீன் ரத்து: நீதிமன்றம் அதிரடி!

Published

on

ராஜராஜ சோழன் விவகாரத்தில் கைதாவதிலிருந்து தப்பிக்க இயக்குநர் பா.ரஞ்சித் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் முன் ஜாமீனுக்கு மனுதாக்கல் செய்தார். இந்த மனு மீதான விசாரணையில் அவருக்கு முன்ஜாமீன் வழங்கிய நீதிபதி சில உத்தரவுகளையும் பிறப்பித்துள்ளார்.

சமீபத்தில் பிரபல இயக்குநர் பா.ரஞ்சித், மன்னர் ராஜராஜசோழன்தான் மக்களிடம் உள்ள நிலத்தை அபகரித்தவர். அவரது ஆட்சியிலிருந்துதான் ஜாதி பிளவு கட்டமைக்கப்பட்டது. தேவதாசி முறை அவர்கள் ஆட்சியில்தான் கொண்டுவரப்பட்டது. தற்போது ராஜராஜ சோழன் எங்களின் ஜாதிக்காரர் என்று 8 ஜாதிக்காரர்கள் சண்டையிட்டு கொள்கிறார்கள். ராஜராஜ சோழன் ஆட்சிதான் இருப்பதிலேயே இருண்ட ஆட்சி என்று நான் சொல்வேன் என சர்ச்சைக்குறிய வகையில் பேசினார்.

இந்த சூழ்நிலையில் ராஜராஜ சோழனை இழிவு படுத்தும் வகையில் பேசியதாக இயக்குநர் ரஞ்சித் மீது இரண்டு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்நிலையில், தனக்கு முன் ஜாமீன் வழங்கக் கோரி சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் இயக்குநர் பா.ரஞ்சித் மனுதாக்கல் செய்திருந்தார்.

இந்த மனு மீதான விசாரணையில் நேற்று நீதிபதி, ரஞ்சித்தை காவலில் எடுத்து விசாரிக்க வேண்டிய அவசியமில்லை, அவருக்கு முன் ஜாமீன் வழங்கி உத்தரவு பிறப்பித்தார். இனிவரும் காலங்களில் இதுபோன்ற வகையில் பேசக்கூடாது என ரஞ்சித்துக்கு அறிவுறுத்தினார். அவ்வாறு சர்ச்சைக்குரிய வகையில் பேசினால் ரஞ்சித்தின் முன்ஜாமீனை ரத்துசெய்யக் கோரி காவல் துறையினர் அதுசம்பந்தப்பட்ட மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தை அணுகலாம் என்றும் தனது உத்தரவில் குறிப்பிட்டுள்ளார்.

Trending

Exit mobile version