உலகம்

இலங்கை அரசியலில் புதிய திருப்பம்.. பிரதமராக ரணில் விக்ரமசிங்கே பதவி ஏற்பு!

Published

on

கொழும்பு: இலங்கை பிரதமராக ரணில் விக்ரமசிங்கே மீண்டும் பதவி ஏற்றுள்ளார்.

இலங்கையில் கடந்த 2 மாதங்களாக நீடித்து வந்த அரசியல் குழப்பம் தற்போதுதான் முடிந்து இருக்கிறது. இலங்கை அதிபர் சிறிசேனா அந்நாட்டு பிரதமர் ரணிலை பதவியில் இருந்து நீக்கியதை அடுத்து பல குழப்பம் ஏற்பட்டது.

இதையடுத்து நடந்த பல அரசியல் திருப்பங்கள், ஸ்டண்டுகள் தற்போது முடிவிற்கு வந்துள்ளது. தற்போது இலங்கை பிரதமராக ரணில் விக்ரமசிங்கே மீண்டும் பதவி ஏற்றுள்ளார்.

கடந்த, அக்டோபர் 26 ஆம் தேதி, இலங்கையின் அதிபர் மைத்ரிபால சிறிசேனா, மகிந்த ராஜபக்சேவை பிரதமராக அறிவித்தார். ரணில் விக்ரமசிங்கேவை பிரதமர் பதவியில் இருந்து நீக்கினார். ஆனால் ரணில் விக்ரமசிங்கே தான்தான் பிரதமர் என்று கூறினார். இதையடுத்து கூட்டப்பட்ட நாடாளுமன்றத்தில் ராஜபக்சேவிற்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரப்பட்டது.

seithichurul

Trending

Exit mobile version