சினிமா செய்திகள்

சிவகார்த்திகேயன் வெளியிட்ட ரங்கா பட டீசர்!

Published

on

புதுப்பட டீசர் மற்றும் டிரைலர்களை வெளியிடும் பிரபலங்களாக சிவாகார்த்திகேயன் மற்றும் விஜய்சேதுபதி மாறி வருகின்றனர். தங்களின் போட்டி நடிகர்கள் என்றாலும், சம கால நடிகர்கள் என்றாலும், மூத்த நடிகர்களின் படங்கள் கூட சில சமயத்தில் இவர்கள் மூலமாகத்தான் வெளியிடப்படுகிறது.

வினோத் டிஎல் இயக்கத்தில் சிபிராஜ், நிகிலா விமல் நடிப்பில் உருவாகியுள்ள ரங்கா படத்தின் டீசரை நடிகர் சிவகார்த்திகேயன் தனது சமூக வலைதள பக்கங்களின் வாயிலாக வெளியிட்டுள்ளார்.

ரோஜா படத்திற்கு பிறகு காஷ்மீர் பின்ணணியில் அதுபோன்ற ஒரு கதைக்களத்துடன் சிபிராஜின் ரங்கா படம் உருவாகியுள்ளது.

ரஜினி நடித்த ரங்கா படத்தின் தலைப்பு சத்யராஜின் மகனான சிபிராஜுக்கு கிடைத்துள்ளது குறிப்பிடத்தக்கது. சமீபத்தில், நல்ல கதைகளை தேர்வு செய்து நடித்து வரும் சிபிராஜுக்கு ரங்காவும் கை கொடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

seithichurul

Trending

Exit mobile version