டிவி

எவிக்ட் ஆகிறாரா ரம்யா..? – செய்த தவறுகள் என்ன? – பழைய வீடியோக்களை வைரலாக்கும் ரசிகர்கள்

Published

on

பிக் பாஸ் வீட்டிலிருந்து நடிகை ரம்யா பாண்டியன் இந்த வாரம் எவிக்ட் ஆக உள்ளதாக சொல்லப்படுகிறது. இதனால் அவருக்கு எதிராகவும் ஆதரவாகவும் நெட்டிசன்கள் மல்லுக்கட்டி வருகின்றனர்.

ரம்யாவுக்கு பிக் பாஸ் வீட்டில் இதுநாள் வரை ஏறுமுகமாகத்தான் இருந்தது. ஆனால், அவர் என்று நடிகர் ஆரியைப் பற்றி புரணி பேசி, அவருக்கு எதிராக செயல்பட ஆரம்பித்தாரோ அன்றிலிருந்து அவருக்கு இறங்குமுகமாக மாறிவிட்டது. பிக் பாஸ் சீசன் 4 டைட்டிலை வெல்ல வாய்ப்பிருப்பதாக பார்க்கப்பட்ட ரம்யா, தற்போது எவிக்ட் செய்யப்படும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது பலரை அதிர்ச்சிக்கு உள்ளாக்கி இருக்கிறது.

இதனால் கொதிப்படைந்த ரம்யாவின் ரசிகர்கள், அவருக்கு ஆதரவாக ஒரு புறம் சமூக வலைதளங்களில் தீவிரப் பிரச்சாரத்தை ஆரம்பித்துள்ளனர். ஆனால் சிலரோ, ரம்யாவின் வீழ்ச்சிக்கு அவரேதான் காரணம் என்று பழைய வீடியோக்களைப் பகிர்ந்து வருகின்றனர்.

பிக் பாஸ் வீட்டுக்குள் சென்ற ரம்யாவின் தம்பி, ‘இந்த வாரம் எவிக்ட் ஆனா அதுக்கு நீ பொறுப்பில்ல’ என்று கூறியுள்ளதும் சர்ச்சையாகியுள்ளது. இதற்கு நெட்டிசன்கள், ‘ரம்யா காரணமில்லனா, மக்கள்தான் காரணம்னு சொல்ல வர்றாரா தம்பி?’ என்று பொங்கி வருகின்றனர்.

வைரல் வீடியோக்கள்:

 

seithichurul

Trending

Exit mobile version