டிவி

‘இது கேம் ஷோ தானே… பிரசார நிகழ்ச்சி இல்லையே..?’- பிக்பாஸை கரித்துக் கொட்டும் ரம்யா பாண்டியனின் அக்கா!

Published

on

‘பிக்பாஸ் நிகழ்ச்சி என்பது ஒரு கேம் ஷோ தானே… அது ஒன்றும் பிரசார நிகழ்ச்சி இல்லையே?” என ரம்யா பாண்டியனின் அக்கா சுந்தரி பாண்டியன் பிக்பாஸ் நிகழ்ச்சியை மட்டுமல்லாது கமல்ஹாசனையும் மறைமுகமாக சாடியுள்ளார்.

Ramya Pandian Age, Height, Body Size, Caste, Movies list, Photos & Videos

பிக்பாஸ் நிகழ்ச்சியில் நேற்று இறுதி நிகழ்ச்சி நடத்தப்பட்டு வெற்றியாளராக ஆரி அறிவிக்கப்பட்டார். ரம்யா பாண்டியன் டாப் 4 போட்டியாளராக நிகழ்ச்சியை நிறைவு செய்தார். பிக்பாஸ் போட்டியில் பல கட்ட நிலைகளில் அரசியல் நடந்திருப்பதாகத் தற்போது ரம்யா பாண்டியனின் அக்கா சுந்தரி பாண்டியன் குற்றம் சுமத்தியுள்ளார். சுந்தரி பாண்டியன் கூறுகையில், “பிக்பாஸ் நிகழ்ச்சி ஒரு கேம் ஷோ தான். அதை பிரசார நிகழ்ச்சியாகவே மாற்றிவிட்டனர்.

கடந்த 8 வாரங்களாகவே பிக்பாஸ் நிகழ்ச்சியே ஆரி தான் ஜெயிக்க வேண்டும் என்ற நோக்கிலேயே முழுவதுமாக நகர்த்தப்பட்டது. தளபதி விஜய் சொல்வது போல பாலிடிக்ஸ்-ல கேம் விளையாடாதீங்க… கேம்-ல பாலிடிக்ஸ் பண்ணாதிங்க” எனக் குறிப்பிட்டு பிக்பாஸ் நிகழ்ச்சியை மட்டுமல்லாது கமல்ஹாசனையும் மறைமுகமாகவே சாடியுள்ளார் சுந்தரி பாண்டியன்.

நடிகை ரம்யா பாண்டியன் பிக்பாஸ் நிறைவு நிகழ்ச்சியில் 16 லட்சம் ஓட்டுகள் பெற்று நிகழ்ச்சியின் மூன்றாவது ரன்னர் அப் ஆக நிகழ்ச்சியை விட்டு வெளியேறினார் என்பது குறிப்பிடத்தக்கது.

Trending

Exit mobile version