சினிமா செய்திகள்

நாயகி சார்ந்த கதை… நடிகர் சூர்யா படத்தில் கமிட் ஆன ரம்யா பாண்டியன்..!

Published

on

பிக்பாஸ் புகழ் ரம்யா பாண்டியன் தற்போது நடிகர் சூர்யாவின் படத்தில் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

பிக்பாஸ் தமிழ் சீசன் 4 நிகழ்ச்சியின் மூலம் தொடர்ந்து தனது புகழை தக்க வைத்துக் கொண்ட ரம்யா பாண்டியனுக்கு தற்போது சினிமாவிலும் வாய்ப்புகள் தேடி வருகின்றனவாம். இயக்குநர் ராஜுமுருகன் இயக்கிய ஜோக்கர் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகம் ஆனவர் ரம்யா பாண்டியன்.

அதன் பின்னர் நடிகர் சமுத்திரகணிக்கு ஜோடியாக ஆண் தேவதை என்ற படத்திலும் நடித்து விமர்சன ரீதியாகப் பாராட்டுகளைப் பெற்றார். முகிலன் என்னும் ஓடிடி வெளியீடு படம் ஒன்றிலும் நடித்துள்ளார். தற்போது நடிகர் சூர்யாவின் 2டி தயாரிப்பு நிறுவனம் சார்பில் தயாரிக்கப்படும் படம் ஒன்றில் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இந்தப் படம் முழுக்க முழுக்க ஒரு நாயகியைச் சார்ந்த கதையாக நகர்கிறதாம்.

அறிமுக இயக்குநர் அரிசில் மூர்த்தி இந்தப் படத்தை இயக்க உள்ளார். விரைவில் படப்பிடிப்பு தொடங்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

seithichurul

Trending

Exit mobile version