தமிழ்நாடு

மேலும் ஒரு ஆசிரியர் மீது பாய்ந்தது குண்டர் சட்டம்: பெரும் பரபரப்பு!

Published

on

பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஆசிரியர்கள் வரிசையாக கைது செய்யப்பட்டு வருகின்றனர் என்பதும் அவர்கள் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர் என்பது தெரிந்ததே

இந்த நிலையில் பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஆசிரியர் ராஜகோபாலன் மீது சமீபத்தில் குண்டர் சட்டம் பாய்ந்தது என்பதை ஏற்கனவே பார்த்தோம். இந்த நிலையில் தற்போது மேலும் ஒரு ஆசிரியர் மீது குண்டர் சட்டம் பாய்ந்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூரில் உள்ள பள்ளிவாசல் மேல்நிலைப்பள்ளியில் பணியாற்றி வந்த அறிவியல் ஆசிரியர் ஹபீக் முகமது என்பவர் மாணவிகளுக்கு செல்போனில் பேசி பாலியல் தொல்லை கொடுத்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இதனையடுத்து பாதிக்கப்பட்ட மாணவிகளில் ஒருவர் அளித்த புகாரின் பேரில் காவல்துறையினர் அவரை கடந்த மாதம் கைது செய்தனர்

அவர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்ட நிலையில் அவரை பள்ளி நிர்வாகம் பணியிடை நீக்கம் செய்தது. இந்த நிலையில் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள ஹபீக் முகமது மீது குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கார்த்தி ஆட்சியர் சந்திரகலா பரிந்துரை செய்தார்

இந்த பரிந்துரையை ஏற்று மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டதையடுத்து மீது ஆசிரியர் ஹபீக் முகமது மீது குண்டர் தடுப்பு சட்டத்தில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

seithichurul

Trending

Exit mobile version