உலகம்

எப்படிப்பட்ட மிருகங்கள் தாலிபான்கள்? – இயக்குனர் ராம்கோபால் பகிர்ந்த வீடியோ

Published

on

ஆப்கானிஸ்தானை தாலிபன்கள் கைப்பற்றியுள்ளனர். ஜனாதிபதி மாளிகை உட்பட எல்லாம் அவர்களின் கட்டுப்பாட்டில் கொண்டுவரப்பட்டுள்ளது. தாலிபான்கள் கடுமையான சட்டங்களை அமுல்படுத்துவார்கள் என்பதால் அந்நாட்டில் வசிக்கும்
பலரும் அந்நாட்டை விட்டு வெளியேற முயற்சி செய்து வருகின்றனர். அப்படி வெளிநாடு செல்வதற்காக காபூலில் உள்ள விமானநிலையத்தில் அந்நாட்டு மக்கள் பலரும் ஒரே நேரத்தில் நுழைந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. அதன்பின் விமானங்கள் ரத்து செய்யப்பட்டது.

இதற்கிடையே அங்கிருந்து கிளம்பிய அமெரிக்க ராணுவ விமானத்தின் சக்கரத்தின் மீது ஏறி கூட சிலர் பயணம் செய்தனர். அதில் கீழே விழுந்து மரணமடைந்தனர். அந்த வீடியோ வெளியாகி சமூக வலைத்தளங்களில் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

இந்நிலையில், ஜனாதிபதி மாளிகையில் தாலிபான்கள் உணவு அருந்து வீடியோவை தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பாலிவுட் இயக்குனர் ராம்கோபால் வர்மா ‘ஜனாதிபதி மாளிகையில் தாலிபான்கள் எப்படி உணவு அருந்துகிறார்கள் என்று பாருங்கள். இதிலிருந்து அவர்கள் எந்தவகையான மிருகங்கள் என்பதை தெரிந்து கொள்ளலாம்’ என பதிவிட்டுள்ளார்.

seithichurul

Trending

Exit mobile version