சினிமா செய்திகள்

அரசே இதை செய்யுங்க, ‘ஆர்.ஆர்.ஆர்.’ படம் பார்க்க யாரும் போக மாட்டாங்க: ராம்கோபால் வர்மா

Published

on

அரசு இதை மட்டும் செய்தால் ராஜமவுலியின் ‘ஆர்.ஆர்.ஆர்.’ படம் பார்க்க யாரும் செல்ல மாட்டார்கள் என இயக்குனர் ராம் கோபால் வர்மா தனது டுவிட்டர் பக்கத்தில் சர்ச்சைக்குரிய வகையில் டுவிட்டை பதிவு செய்திருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இந்தியாவில் மட்டுமின்றி உலகமே எதிர்பார்க்கும் ஒரு திரைப்படமாக எஸ்எஸ் ராஜமவுலியின் ‘ஆர்.ஆர்.ஆர்.’ என்ற திரைப்படம் உருவாகி உள்ளது என்பதும் இந்த படத்தின் புரமோஷன் இதுவரை இல்லாத அளவில் படத்தின் மேக்கிங் விட பிரம்மாண்டமாக நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

ஜனவரி 7ஆம் தேதி உலகம் முழுவதும் ரிலீஸ் ஆக உள்ள இந்த படத்திற்கு இதுவரை எந்த படத்திற்கும் இல்லாத அளவிற்கு எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் எஸ்எஸ் ராஜமவுலியின் சொந்த மாநிலமான ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த ராம் கோபால் வர்மா இந்த படத்திற்கு எதிராக டுவிட் ஒன்றை பதிவு செய்து இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

அரசுக்கு நான் ஒரு ஐடியா தருகிறேன், 2 டோஸ் தடுப்பூசி போட்டவர்கள் மட்டுமே ‘ஆர்.ஆர்.ஆர்.’ படம் பார்க்க தியேட்டருக்கு செல்ல வேண்டும் என ஒரு அறிவிப்பை வெளியிடுங்கள். ‘ஆர்.ஆர்.ஆர்.’ படத்துக்கு யாரும் செல்ல மாட்டார்கள், அந்த படத்திற்கு செல்ல வேண்டும் என்ற ஆசையே போய்விடும் என்று அவர் தெரிவித்துள்ளார். அவருடைய இந்த சர்ச்சைக்குரிய டுவிட்டிற்கு ரசிகர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில் ஒரு சில மாநிலங்களில் இரவு நேர ஊரடங்கு உள்பட பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருவதை அடுத்து ‘ஆர்.ஆர்.ஆர்.’ படத்தின் ரிலீஸ் தேதி தள்ளிப் போகும் என்று வதந்திகள் கிளம்பி வருகிறது. ஆனால் இந்த வதந்தியை மறுத்த ராஜமவுலி தரப்பினர் திட்டமிட்டபடி ஜனவரி 7ஆம் தேதி ‘ஆர்.ஆர்.ஆர்.’ திரைப்படம் ரிலீஸ் ஆகும் என்றும் அதில் எந்தவிதமான மாற்றமும் இல்லை என்றும் அறிவித்துள்ளனர்.

Trending

Exit mobile version