தமிழ்நாடு

தமிழர்களுக்கு வேலை இல்லையா? சர்ச்சை விளம்பரத்தால் வருத்தம் தெரிவித்த ராமராஜ் காட்டன் குரூப்!

Published

on

இந்தியாவின் முன்னணி ஜவுளி நிறுவனங்களில் ஒன்றான ராமராஜ் காட்டன் குரூப் நிறுவனம் சமீபத்தில் வெளியிட்ட வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்றில் தெலுங்கு மக்களுக்கு முதல் இடம் கொடுப்பதாக அறிவித்து இருந்தது. இதனை அடுத்து ஆவேசமான தமிழர்கள் ராம்ராஜ் காட்டன் நிறுவனத்திற்கு எதிராக ஹேஷ்டேக்கை பதிவு செய்து ட்விட்டரில் ட்ரெண்டாக்கினர். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

திருப்பூர், மதுரை உள்ளிட்ட அலுவலகத்தில் வேலை செய்ய தெலுங்கர்களுக்கு முன்னுரிமை என்றால், தமிழர்களுக்கு வேலை இல்லையா என்று ஆவேசமான கருத்துக்களை நெட்டிசன்கள் கூறினர். மேலும் ராமராஜ் காட்டன் தயாரிப்புகளை இனி தமிழர்கள் வாங்க வேண்டாம் என்று கூறியதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த நிலையில் தற்போது இதுகுறித்து ராமராஜ் காட்டன் நிர்வாகம் தனது டுவிட்டர் பக்கத்தில் விளம்பரம் குறித்து வருத்தம் தெரிவித்துள்ளது. அதில் கூறியிருப்பதாவது: சமீபத்தில் வெளியிட்ட வேலைவாய்ப்பு விளம்பரத்தில் தெலுங்கு தெரிந்தவர்களுக்கு முன்னுரிமை என குறிப்பிடப்பட்டிருந்தது ஐதராபாத் பணியிடத்திற்கானதாகும். தவறுதலாக திருப்பூர் என குறிப்பிடப்பட்டது. உங்கள் உணர்வுகள் காயப்படுத்தி இருந்தால் வருந்துகிறோம் என்று தெரிவித்துள்ளது.

ஆனாலும் இதில் சமாதானமாக தமிழர்கள் பல்வேறு கேள்விகளை எழுப்பி வருகின்றனர். திருப்பூரில் இருக்கும் தகவல் தொழில்நுட்ப பிரிவுக்கு ஹைதராபாத்தில் ஏன் ஆள் எடுக்கிறார்கள் என்றும் இது பொய்யான தகவல் என்றும் ஹைதராபாத் அலுவலகத்தில் ஆள் எடுப்பதாக இருந்தால் தெலுங்கு தெரிந்தவர்களுக்கு முன்னுரிமை என்ற வார்த்தையே தேவையில்லை என்றும் ஐதராபாத்தில் உள்ள எல்லோரும் தெலுங்கு தானே பேசுகிறார்கள் என்றும் நெட்டிசன்கள் மீண்டும் பதிலடி கொடுத்து வருகின்றனர்.

ஒரே ஒரு வேலை வாய்ப்பு விளம்பரத்தால் இந்தியாவின் முன்னணி நிறுவனமான ராம்ராஜ் காட்டன் நிறுவனம் தமிழர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Trending

Exit mobile version