சினிமா செய்திகள்

‘ஆர்.ஆர்.ஆர்’ படத்தில் ராம்சரண் தேஜாவின் கேரக்டர் இதுதான்: அட்டகாசமான போஸ்டர் வெளியீடு1

Published

on

ராம்சரண் தேஜா மற்றும் ஜூனியர் என்டிஆர் இருவரும் இணைந்து நடித்து வரும் பிரம்மாண்டமான திரைப்படம் ‘ஆர்.ஆர்.ஆர்’. இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடைபெற்று வருகிறது.

வரும் அக்டோபர் 23ஆம் தேதி இந்தப் படம் வெளியாகும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் துரிதமாக நடைபெற்று வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் ஒரு பக்கம் இந்த படத்தின் தொழில்நுட்ப பணிகள் நடைபெற்றுக் கொண்டிருந்தாலும் இன்னொரு பக்கம் இந்த படத்தின் புரமோஷன் பணிகள் மற்றும் வியாபாரம் குறித்த பணிகள் நடைபெற்று வருகிறது. ஏற்கனவே இந்த படத்தின் தமிழக ரிலீஸ் உரிமையை லைக்கா நிறுவனம் மிகப் பெரிய விலை கொடுத்து வாங்கி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் சற்று முன் ‘ஆர்.ஆர்.ஆர்’ படத்தில் நடித்துள்ள ராம் சரணின் கேரக்டர் குறித்த போஸ்டர் வெளியாகியுள்ளது. இந்த போஸ்டரில் ராம்சரண் தேஜா அல்லுரி சீதாராமராஜூ என்ற கேரக்டரில் நடித்துள்ளதாக இயக்குனர் எஸ்.எஸ்.ராஜமெளலி தனது டுவிட்டரில் குறிப்பிட்டு உள்ளார் இந்த போஸ்டர் தற்போது வைரலாகி வருகிறது.

Trending

Exit mobile version