தமிழ்நாடு

ஜூன் 10ல் மாநிலங்களவை எம்பி தேர்தல்: அதிமுக, திமுகவில் எம்பி ஆவது யார் யார்?

Published

on

தமிழகத்தில் மாநிலங்களவை எம்பிகளாக இருக்கும் இருக்கும் எஸ்.ஆர்.பாலசுப்ரமணியன், நவநீதகிருஷ்ணன், விஜயகுமார் மற்றும் திமுக உறுப்பினர்கள் ஆர்.எஸ். பாரதி, டிகேஎஸ் இளங்கோவன், ராஜேஷ் குமார் 6 பேர்களின் பதவிக்காலம் ஜூன் 29ம் தேதியுடன் நிறைவடையும் நிலையில் அந்த பதவிக்கான தேர்தல் ஜூன் 10ஆம் தேதி நடைபெற உள்ளது.

ஒரு எம்பியை தேர்வு செய்ய 34 எம்.எல்.ஏக்களின் ஆதரவு தேவை என்ற நிலையில் 4 திமுகவுக்கும் 2 அதிமுகவுக்கும் செல்ல வாய்ப்பு உள்ளது. இதில் நான்கு திமுக எம்பி கொள்ளும் உதயநிதியின் ஆதரவு பெற்றவர்களே இருப்பார்கள் என்றும் எம்பி ஆக இருக்கும் நபர்களின் பட்டியல் தயாராகி விட்டதாகவும் திமுக வட்டாரங்கள் கூறுகின்றன.

ஆனால் அதே நேரத்தில் இரண்டு அதிமுக எம்பி பதவிக்கு பலர் போட்டியிடுவதாகவும் ஆனால் அதில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் மற்றும் சிவி சண்முகம் ஆகிய இருவருக்கும் மாநிலங்களவை எம்பி பதவி கிடைக்க அதிக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது .

இந்த தேர்தலுக்கு வேட்புமனு தாக்கல் மே 24-ஆம் தேதி தொடங்குகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

 

seithichurul

Trending

Exit mobile version