தமிழ்நாடு

‘ரஜினியின் ஆதரவு எங்களுக்கே..’ இன்னமும் நம்பும் பாஜக தலைவர்!

Published

on

ரஜினி நிச்சயம் எங்களுக்கு ஆதரவு அளிப்பார் என்று பாஜக தலைவர் எல். முருகன் தெரிவித்துள்ளார்.

நாகர்கோவிலில் பாஜக மாநில தலைவர் எல். முருகன் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், இரண்டு நாட்களாக நடைபெற்ற பாஜகவின் பொங்கல் திருவிழா கோலாகலமாக  அமைந்ததாகவும், ஜனவரி 14 ஆம் தேதி நடைபெறவுள்ள பொங்கல் கொண்டாட்டத்தில் பாஜக தேசிய தலைவர் ஜே பி நட்டா கலந்துகொள்வதாகவும் தெரிவித்தார்.

மேலும், பாஜக மாவட்ட தலைவருக்கு மர்மநபர் கொலை மிரட்டல் விடுத்து, அலுவலகம் தாக்கப்பட்டுள்ளதாவும் இதற்கு தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்கும் என்றும் தெரிவித்தார். ரஜினியின் அரசியல் பின்வாங்கல் குறித்து பேசிய எல். முருகன், ரஜினி தேசியத்தையும், ஆன்மீகத்தையும் நேசிப்பவர். எனவே, அவரது ஆதரவு நிச்சயம் பாஜகவிற்கு இருக்கும் என்றார்.

நடிகர் ரஜினிகாந்த் அரசியல் கட்சி தொடங்க மாட்டேன் என்று கூறியுள்ள நிலையில், அவரது ஆதரவை பெறுவதற்கு மற்ற அரசியல் கட்சியினர் போட்டிபோட்டுக் கொண்டு உள்ளனர்.

Trending

Exit mobile version