இந்தியா

நியாயமாக நீங்கள் பாராட்டியிருக்க வேண்டும்: ஊர்திகள் சர்ச்சை குறித்து முதல்வருக்கு அமைச்சர் ராஜ்நாத் சிங் பதில்!

Published

on

குடியரசு தின அணிவகுப்பில் மத்திய அரசு எடுத்த முடிவுக்கு நியாயமாக நீங்கள் பாராட்டி இருக்க வேண்டுமென முதல்வர் ஸ்டாலினுக்கு எழுதிய கடிதத்திற்கு மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கடிதம் எழுதியுள்ளார்.

குடியரசு தினத்தில் தமிழக ஊர்திகள் இடம் பெறாதது குறித்து பெரும் சர்ச்சை ஏற்பட்ட நிலையில் இது குறித்து தமிழக முதல்வர் முக ஸ்டாலின் அவர்கள் பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதி இருந்தார். இந்த கடிதத்திற்கு பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பதில் கடிதம் எழுதியுள்ளார். அந்த கடிதத்தில் ’குடியரசு தின அணிவகுப்பில் இடம்பெறக்கூடிய அலங்கார ஊர்திகளை தேர்வு செய்ய குழு அமைக்கப்பட்டுள்ளதாகவும், அந்த குழுவின் பரிந்துரையின் அடிப்படையில்தான் எந்தெந்த மாநிலங்கள் சார்பில் எந்தெந்த அமைச்சகங்கள் சார்பில் அலங்கார ஊர்திகள் இடம்பெற வேண்டுமென்று முடிவு செய்யப்பட்டதாகவும், இந்த அணிவகுப்பில் தமிழக அரசின் சார்பிலும் வைக்கப்பட்ட கோரிக்கை குறித்து பரிசீலனை செய்யப்பட்டதாகவும் ஆனால் தமிழக அரசின் கோரிக்கை குழுவினரால் ஏற்றுக்கொள்ளப்படவில்லை என்றும் கூறியுள்ளார்.

தமிழகம் மட்டுமல்ல 29 மாநிலங்களின் சார்பில் அலங்கார ஊர்திகள் இடம் பெற கோரிக்கை வைக்கப்பட்டதாகவும் இந்த ஆண்டு கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக 12 அலங்கார ஊர்திகள் மட்டுமே அனுமதிக்கப்பட்டதாகவும், அலங்கார ஊர்தி குழுவின் பரிந்துரையின் அடிப்படையில்தான் இந்த முடிவு எடுக்கப்பட்டதாகவும் அவர் பதிலளித்துள்ளார். தமிழக அலங்கார ஊர்திகள் கடந்த 2017, 2019,2020, 2021 ஆகிய ஆண்டுகளிலும் இடம்பெறவில்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.

பரிந்துரைக்கப்பட்ட விதிகளின் அடிப்படையில் தான் குடியரசு தின விழா ஊர்திகள் தேர்வு செய்யப்பட்டதாகவும் நியாயமாக இதனை நீங்கள் பாராட்ட வேண்டும் என்றும் தமிழக முதல்வர் முக ஸ்டாலின் அவர்களுக்கு எழுதிய கடிதத்தில் ராஜ்நாத் சிங் கூறியுள்ளார்.

மேலும் குடியரசு தின விழாவில் பங்கேற்கும் ஊர்திகள் குறித்து நிபுணர் குழு தான் முடிவு செய்கிறது என்றும் முதல் மூன்று சுற்றுகளில் தமிழக ஊர்திகள் பரிசீலனை செய்யப்பட்டது என்றும் அடுத்தடுத்த சுற்றுகளில் விதிகளின்படி தமிழக ஊர்திகள் இடம்பெறவில்லை என்றும் அவர் விளக்கம் அளித்துள்ளார்.

 

Trending

Exit mobile version